(படங்கள்) கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ”புத்திசாதூர்யமாக மீண்டெழும் இலங்கை” தொனிப்பொருளிலான மாநாடு.


”வியத்மக” எனப்படும் வருடாந்த மாநாடு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் நேற்று மாலை நடைபெற்றது.

”புத்திசாதூர்யமாக மீண்டெழும் இலங்கை” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 2030ஆம் ஆண்டு அடைய வேண்டிய தேசத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான உபாய மார்க்கங்கள் தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்துடன், வர்த்தகர்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

வித்தியாஜோதி கலாநிதி பந்துல விஜேரத்ன, கலாநிதி மொஹமட் இஸ்மால் ரம்ஸி, மனோசேகரம், எரந்தகினிகே, பேராசிரியர் ரொஹான் குணரத்ன மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் பல்வேறு துறைகள் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

பூகோள பொருாதார சவால்களை எதிர்கொள்ள இவங்கை தயாராக வேண்டும் என இதன்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.






(படங்கள்) கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ”புத்திசாதூர்யமாக மீண்டெழும் இலங்கை” தொனிப்பொருளிலான மாநாடு. (படங்கள்) கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ”புத்திசாதூர்யமாக மீண்டெழும் இலங்கை” தொனிப்பொருளிலான மாநாடு. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.