மன்னார் நகரசபை தலைவருக்கு எதிராக முசலிப்பிரதேசபையில் கண்டனத்தீர்மானம்...முசலிப்பிரதேசபை தவிசாளர் சுபியான் தலைமையில் ஆரம்பமான 3வது சபை கூட்டத்தில் சிலாபத்துறை
வீட்டுத்திட்டம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது . அதன் பின்பு மன்னார் நகரசபை தலைவார்  ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) செயற்பாடுகளை கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.....

முசலிப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் பிரதேசத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட மன்னார் நகரசபை தலைவரின் செயற்பாடு பிரதேச மக்களின் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்க ள்மத்தியில் பிரதேசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்  என்ற கேள்வி எழுந்திருக்கும்  நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை இனியும் அனுமதிக்க முடியாது.இந்த செயப்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அமையவாகவே மன்னார் நகரசபை தலைவர்  ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது......

எ.எம் .றிசாத் -
மன்னார் நகரசபை தலைவருக்கு எதிராக முசலிப்பிரதேசபையில் கண்டனத்தீர்மானம்... மன்னார் நகரசபை தலைவருக்கு எதிராக முசலிப்பிரதேசபையில் கண்டனத்தீர்மானம்... Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5