இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிப்பு.


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக இனோக்கா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளதாக
ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர், மங்கள சமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தின் தலைவராக, திலக ஜயசுந்தரவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக மொஹமட் சித்திக் பாருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக, உமா ராஜமந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன தனது பதவியை இராஜினாமா  செய்வதாக அறிவித்து, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் இந்த நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.

இனோகா சத்யாங்க்கனி விருதுகள் வென்ற பிரபல திரைப்பட , நாடக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://en.wikipedia.org/wiki/Inoka_Sathyangani
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிப்பு. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிப்பு. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5