ஜனா­தி­ப­தி­யாகியவர் கட்­சியில் பதவி வகிக்­கவோ அங்­கத்­தவ­ராக நீடிக்­கவோ முடி­யாது.


பாரா­ளு­மன்­றத்தின் இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் சாதா­ரண பெரும்­பான்­மை யுடன் ஜனா­தி­ப­தி­யா­னவர்
தெரி­வு­செய்­யப்­பட வேண்டும். ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­படும் நபர் அவ­ரு­டைய பத­விக்­காலப் பகு­தியில் எந்­த­வொரு அர­சியல் கட்­சியின் பத­வி­யிலோ அல்­லது அங்­கத்­த­வ­ரா­கவோ இருக்க முடி­யாது. சபா­நா­ய­கரை ஜனா­தி­ப­தியே தெரிவு செய்ய வேண்டும் என்றும் தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இந்த 20 ஆவது திருத்தம் ஏற்­பு­டை­ய­தாக மாட்­டாது. இந்த சட்டம் நிறை­வே­று­மாயின்

2020 ஜன­வரி 9 ஆம் திக­தி­யன்றே நடை­மு­றைக்கு வர வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி நேற்று சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பித்த அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரே­ரணை நேற்று பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் வைத்து சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. இதனை மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க கைய­ளித்­த­துடன், இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுனில் ஹந்­து­நெத்தி, நளிந்த ஜய­திஸ்ஸ, நிஹால் கல­பத்தி ஆகியோர் கலந்து கொண்­டனர்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கைய­ளித்த 20 ஆவது திருத்த தனி­நபர் பிரே­ர­ணை­யா­னது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை முற்­றாக நீக்­கு­வ­தற்கு வலி­யு­றுத்­து­கின்­றது. இதன்­படி சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள தனி­நபர் பிரே­ரணை சட்­டமா அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு பின்னர் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும். அதன்­பின்னர் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சரின் பரிந்­து­ரையின் பிர­காரம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க்­ப­பட்டு விவா­தத்­திற்கு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தனி­நபர் பிரே­ர­ணையில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள், தெரிவு செய்யும் முறைமை உட்­பட பல விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் 20 திருத்த சட்ட தனி நபர் பிரே­ர­ணையின் சுருக்கம் பின்­வ­ரு­மாறு,

அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்­தச்­சட்­ட­மூ­ல­மாக இது இனம்­கா­ணப்­ப­டு­கி­றது. அர­சி­ய­ல­மைப்பின் நான்­கா­வது சரத்தைத் திருத்­து­வ­தற்­கான பிரே­ர­ணை­யாகும். இந்த பிரே­ர­ணையின் ஊடாக வாக்­கெ­டுப்­பினால் ஜனா­தி­பதி தெர­வு­செய்­யப்­பட வேண்டும் என்ற அர­சி­ய­ல­மைப்பின் சரத்து நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­தி­யா­னவர் அர­சாங்­கத்தின் தலைவர் என்ற அர­சி­ய­ல­மைப்பின் வச­னத்தை 20 ஆவது பிரே­ரணை நீக்­கு­வ­துடன் இவர் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் செயற்­பட வேண்­டி­ய­வ­ராக இருக்க வேண்டும் என்று கூறு­கி­றது.

அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­ப­தி­யா­னவர் மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட வேண்டும் என்­ப­தற்கு பதி­லாக பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தெரிவு செய்­யப்­பட வேண்­டி­ய­வ­ராக இருக்க வேண்டும். இவ்­வாறு தெரிவு செய்­யப்­படும் ஜனா­தி­ப­தி­யா­னவர் சாதா­ர­ண­மாக ஐந்து வரு­டங்கள் பத­வி­வ­கிக்க வேண்டும் என இந்த பிரே­ர­ணையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது அமர்­வி­லி­ருந்து நான்கு வாரத்­துக்குள் இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன் ஜனா­தி­ப­தி­யா­னவர் தெரி­வு­செய்­யப்­பட வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தெரி­வு­செய்­யப்­படும் ஜனா­தி­ப­தி­யா­னவர், அவ­ரு­டைய முத­லா­வது பத­விக்­காலம் முடிந்தால் தவிர, பாரா­ளு­மன்­றத்தின் பதவி காலம் முடி­வ­டை­யும்­வரை தொடர்ந்து அந்தப் பத­வியில் இருக்க வேண்டும் என இந்த பிரே­ர­ணையில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் உயி­ரி­ழத்தல், பத­வி­வி­லகல் அல்­லது ஜனா­தி­பதி பத­விக்கு வெற்­றிடம் ஏற்­ப­டும்­போது 4 வாரங்­க­ளுக்கு மேற்­ப­டாத காலப் பகு­தியில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு ஜனா­தி­பதி தெரி­வு­செய்­யப்­பட வேண்டும். இவ்­வாறு தெரி­வு­செய்­யப்­ப­டு­பவர் முன்­னைய ஜனா­தி­ப­தியின் எஞ்­சி­யி­ருக்கும் காலப் பகுதி வரைக்கும் அப்­ப­த­வியை வகிக்க வேண்டும். பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்ட பின்னர் ஜனா­தி­ப­தியின் பதவி வெற்­றி­ட­மாகும் சந்­தர்ப்­பத்தில் ஒரு வாரத்­துக்குள் சபா­நா­யகர் பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­ட­வேண்டும்.

ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­படும் நபர் அவ­ரு­டைய பத­விக்­காலப் பகு­தியில் எந்­த­வொரு அர­சியல் கட்­சியின் பத­வி­யிலோ அல்­லது கட்­சியின் அங்­கத்­த­வ­ரா­கவோ இருக்க முடி­யாது என இந்த பிரே­ர­ணையில் கூற­ப­பட்­டுள்­ளது.

இரா­ஜ­தந்­தி­ரிகள், தூது­வர்கள் உத்­தி­யோ­க­பூர்வ பிர­தி­நிதி உள்­ளிட்ட நிய­ம­னங்­களை மேற்­கொள்­ளும்­போது ஜனா­தி­ப­தியின் பரிந்­து­ரைக்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் அவ­சி­ய­மாகும் என்றும் ஜனா­தி­ப­தியின் செய­லா­ளர்கள், மற்றும் அதி­கா­ரி­களின் எண்­ணிக்­கையை அமைச்­ச­ரவை தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் கூறப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் 50 வீதத்­துக்கும் அதி­க­மான ஆச­னங்­களைப் பெற்ற அர­சியல் கட்­சி­யொன்றைச் சேர்ந்த, பிர­தமர் வேட்­பா­ள­ராக வேட்­பு­ம­னுவி்ல் குறிப்­பி­டப்­பட்டு வெற்­றி­யீட்­டிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ரையே ஜனா­தி­பதி பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும்.மேலும் பொதுத் தேர்தல் நடை­பெற்று அடுத்த பிர­தமர் நிய­மிக்­கும்­வரை பிர­தமர் அவ­ரு­டைய பத­வியில் இருப்­ப­தற்கு தகு­தி­ய­டை­ய­வ­ராவார் எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

நீதி­மன்றம் ஒன்றின் ஊடாக குற்­ற­வா­ளி­யாக அடை­யாளம் காணப்­பட்ட நபர் ஒரு­வ­ருக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தாயின் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யுடன் பொது­மன்­னிப்பு வழங்க முடியும். ஜனா­தி­பதி சபா­நா­ய­கரை நிய­மிப்­ப­வ­ராக இருப்பார். பிர­தமர் பத­விக்கு வெற்­றிடம் ஏற்­பட்­டாலும் அமைச்­ச­ர­வையில் பிறி­தொரு அமைச்­சரை பதில் பிர­த­ம­ராக நிய­மிக்க முடி­யாது

அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் தொடர்பில் அறிந்­து­கொள்­வ­தற்கும் அது குறித்து தனது நிலைப்­பாட்டை அறிவிப்பதற்கும் ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என இந்த பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் அந்த அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலே தவிர, தற்பொழுது ஜனாதிபதியாகப் பதவிவகிக்கும் நபர் 2020 ஜனவரி 8ஆம் திகதி வரை தனது பதவியில் இருப்பதற்கு உரித்துடையவராவார். அதேநேரம், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் தற்பொழுது பதவியிலிருக்கும் பிரதமர் தற்பொழுது நடைமுறையிலிருக்கும் சட்டத்துக்கு அமையவே பிரதமராக இருப்பார். 2020 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதியன்றே இந்த சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையில் சுட்டிகாட்ப்பட்டுள்ளது.
ஜனா­தி­ப­தி­யாகியவர் கட்­சியில் பதவி வகிக்­கவோ அங்­கத்­தவ­ராக நீடிக்­கவோ முடி­யாது. ஜனா­தி­ப­தி­யாகியவர்  கட்­சியில் பதவி வகிக்­கவோ அங்­கத்­தவ­ராக நீடிக்­கவோ முடி­யாது. Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.