'நரகம் தளர்வடைந்தது சொர்க்கம் அழுதது'


-லத்தீப் பாரூக்-
ஜெரூஸலம் நகரம் தங்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்டபோது அதை எதிர்த்து அமைதியான
முறையில் ஆர்ப்பாட்டம் செய்த அப்பாவி பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய சியோனிஸ யூதப் படைகளால் கொன்று குவிக்கப்பட்ட போது அதை முழு முஸ்லிம் உலகமும் கை கட்டி வேடிக்கை பார்த்து மௌனித்து நின்றுள்ளது.

இது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். இந்த மௌனமானது இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவினதும் சியோனிஸ யூதர்களினதும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் நோக்கில் அடிமைகளாகவே இந்த ஆட்சியாளர்கள் தமது பதவிகளைத் தக்க வைத்துள்ளனர் என்பதையே நினைவூட்டுகின்றது.


2018 மார்ச் 14 திங்கள் கிழமை பலஸ்தீன வரலாற்றில் மீண்டும் ஒரு இரத்தக்கரை படிந்த தினமாகும். இந்த உலகின் சகல விதமான தார்மிக மற்றும் சட்ட விதிகளை மீறி இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செய்துள்ள பலஸ்தீனர்களின் பாரம்பரிய வாழ்விடமான ஜெரூஸலம் நகருக்கு அமெரிக்கா இஸ்ரேலில் உள்ள அதன் தூதரகத்தை மாற்றியதைக் கண்டித்து அன்றைய தினம் பலஸ்தீன மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


அதற்கு அடுத்த தினமான மார்ச் 15ம் திகதி, 1948ம் ஆண்டு பலஸ்தீன மக்கள் தங்களது தாயகத்தில் இருந்து இஸ்ரேலிய பயங்கரவாத படைகளால் விரட்டி அடிக்கப்பட்ட 70 ஆண்டு நினைவு தினமாகும்.


அnரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளால் மத்திய கிழக்கில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தமது தாயகத்துக்காக குரல் கொடுத்த பலஸ்தீன மக்கள் மீது வழமை போல் தனது காட்டுமிராண்டித் தனத்தை கட்டவிழ்த்து விட்டது. இந்தச் சம்பவத்தில் 62 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2700க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.


பலஸ்தீன மக்கள் மீது சியோனிஸ யூதர்கள் நடத்தி முடித்துள்ள மிக அண்மிய படுகொலைச் சம்பவமாக இது அமைந்துள்ளது. அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் வாய் திறக்காமல் மௌனமாக இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்து நின்றனர். இந்த அரசுகளில் சவூதி, எகிப்து, பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம் என்பன ஒரு படி மேலே சென்று இஸ்ரேலுக்கு சார்பாக நின்றுள்ளன.


இந்தக் கொடுங்கோலர்கள் தம்மை தாமே தாழ்த்திக் கொள்ளக் கூடிய மிகவும் கீழ்த்தரமான நிலை இதுதான். சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட இஸ்லாமிய ஆட்சி முறையில் பதவியில் இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களுள் மிகவும் கேவலமான ஆட்சியாளர்கள் இன்றைய முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள தான். இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும இவர்களுக்குள்ள தொடர்புகள் ஒரு புறம் இருக்க மனித குலத்தோடும் மனிதாபிமானத்தோடும் கூட எந்த வகையிலும் தொடர்பற்ற ஜடங்கள் தான் இந்த ஆட்சியாளர்கள்.


உலகப் புகழ் பெற்ற சமகால இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்தாவி வெளியிட்டுள்ள கருத்தில் உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஜெரூஸலம் தொடர்பாக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டும். காரணம் இது பலஸ்தீனர்களையும் அரபிகளையும் மட்டும் பாதிக்கின்ற ஒரு விடயம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.


'உலக முஸ்லிம்கள் முதலாவதாக கவனம் செலுத்த வேண்டிய காரணமாக பலஸ்தீனம் உள்ளது என்பதை மீண்டும் நாம் வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். பலஸ்தீனத்தைப் பாதுகாக்க வேண்டியது முஸ்லிம்கள் அனைவரதும் தார்மிக மற்றும் சமயக் கடமையும் ஆகும்' என்று அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது தூதரகத்தை இஸ்ரேலின் இன்றைய தலைநகரான டெல் அவிவ்வில் இருந்து ஜெரூஸலத்துக்கு மாற்றியமை தொடர்பாகவே அவர் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அதற்கான ஒரு அடையாளமாகவே தனது தூதரகத்தை இடம் மாற்றி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்த தினத்தை 'நரகம் தளர்வடைந்;தது, சொர்க்கம் அழுதது' என ஒரு வர்ணனையாளர் குறிப்பிட்டுள்ளார். 59 முஸ்லிம் நாடுகளாலும் 1.6 பில்லியன் முஸ்லிம்களாலும் கைவிடப்பட்டு, நாசீஸிஸவாத (தன்மீது தான் மட்டுமே விருப்பு கொள்ளும் நிலை) சவூதி அரசாலும் அதன் அடிவருடிகளாலும் தலைமை தாங்கப்படும் அரபு உலகால் துரோகம் இழைக்கப்பட்டு பலஸ்தீனர்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டதால் இன்று முஸ்லிம்களின் மூன்றாவத புனிதத்தலம், முதலாவது கிப்லா, புனித மிஃராஜ் பயணத்தின் போது நபி அவர்கள் தலைமை தாங்கி ஏனைய நபிமார்கள் அனைவரும் தொழுகை நடத்திய இடம் என பலஸ்தீன மக்களின் இரத்தத்தோடு கலந்து விட்ட எல்லா புனித இடங்களும் இன்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு யூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


70வது வருட நகபா தினத்தில் (பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட) சிந்தப்பட்டுள்ள இந்த இரத்தத்துக்கு உலக மனித வரலாற்றில் எதுவுமே சமாந்தரமாகி விட முடியாது. அன்றைய தினம் யூதர்கள் பலஸ்தீனர்களின் இரத்தத்தால் வழமை போல் தமக்கு தாமே அபிஷேகம் செய்து கொண்டனர். மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காணும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை ஒட்டு மொத்தமாக அங்கீகரிக்கும் முயற்சிக்கான கடைசி ஆணியை அடித்துள்ளார்.


'அரபு உலகத் தலைவர்கள் கோழைகள்' என்று இன்று பலஸ்தீன பெண்களே துணிந்து கருத்து வெளியிட்டுள்ளனர். 'அவர்கள் பெயரளவில் தான் ஆண்களே தவிர ஆண்மைக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது' என தனது சுதந்திரத்துக்காகப் பேராடும் விரக்தி நிலையில் உள்ள ஒரு பலஸ்தீனப் பெண் தெரிவித்துள்ளார்.


இந்த காஸா ஆர்ப்பாட்டதின் போது காயம் அடைந்த பலஸ்தீனர்களுக்குத் தேவையான மருத்துவ சகிச்சைகளுக்காக அவர்களை கொண்டு செல்ல தயாரான துருக்கிய விமானங்கள் தனது விமான நிலையங்களைப் பயன்படுத்த முடியாது என எகிப்தின் கொடுங்கோலன் சிசி தடை விதிக்கும் அளவுக்கு அரபு உலக ஆட்சியாளாகள் காட்டு மிராண்டிகளாக மாறியுள்ளனர்.
இஸ்ரேலின் அட்டூழியங்கள் தொடர்பாக சர்வதேசம் மௌனம் காததுள்ளதை துருக்கி ஜனாதிபதி எர்டொகன் வன்மையாகக் கண்டித்துள்ளார். 'இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு எதிரான சர்வதேச மௌனம் நீடிக்குமானால் காட்டுமிராண்டித் தனமும் கொள்ளைக் கோஷ்டிகளின் ஆட்சி முறையும் கோலோச்சும் குழப்பகரமான நிலைக்குள் உலகம் தள்ளப்படும்' என எர்டொகன் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் சுறுசுறுப்பு காட்டுமாறு துருக்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. காஸாவில் காயம் அடைந்த மக்களை சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளில் தனது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் Nலும் குறிப்பிட்டுள்ளார்.


பலஸ்தீனர்களிடம் இருந்து ஜெரூஸலத்தை திருட துருக்கி ஒருபோதும் அனுமதிக்காது. 'எமது சகோதரர்களின் போராட்டத்தை நாம் தொடர்ந்து ஆதரிப்போம். நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன பூமி அந்த ஆக்கிரமிப்பில் இருந்து மீற்கப்படும் வரை இந்த ஆதரவு தொடரும். விடுவிக்கப்டும் பலஸ்தீன நாட்டின் எல்லைகளில் அமைதியும் பாதுகாப்பும் நிலவ துருக்கி உதவும்' என்றும் துருக்கி ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகள் இஸ்ரேல் விடயத்தில்; இரட்டை வேடம் பூண்டுள்ளன. ஒரு மேலைத்தேச நாடாவது இஸ்ரேலின் படுகொலைகளைக் கண்டித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதை சர்வதேச அவதானிப்பாளர்கள் பலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.


ஒரே நாளில் இஸ்ரேலின் ஏதாவது ஒரு நகரில் 60க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்ட்டிருந்தால் இந்த உலகம் எந்தளவு கூச்சல் இட்டிருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். ஆனால் இன்று பல மேலைத்தேச அரசுகள் ஊமைகளாகவும் செவிடர்களாகவும் மாறிவிட்டன. இதில் மிகவும் கேவமான விடயம் என்வென்றால் இந்தத் தாக்குதலை சட்டப்படியான ஒரு தற்பாதுகாப்பு செயல் எனக் கூறி சில நாடுகள் அதை நியாயப்படுத்த முனைவதாகும்.


தனக்கு முன் பதவியில் இருந்தவர்களை விட சற்று வித்தியாசமானவர்தான் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். சமாதானம் தொடர்பாக பலஸ்தீன தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை செவி மடுக்கவோ அல்லது அதில் கவனம் செலுத்தவோ அவர் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இஸ்ரேலியர்கள் தமது நாடு ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை கொண்டாடும் அதேவேளை அதே தினத்தில் பலஸ்தீனர்கள் தாங்கள் வெளியேற்றப்பட்டதையும் படுகொலை செய்யப்பட்டதையும் நினைவு கூறுகின்றனர். அத்தகைய ஒரு தினத்தை டிரம்ப் தனது தூதரகத்தை இடம்மாற்ற தெரிவு செய்தமை அவர் இந்த விடயத்தை எந்தளவு உணர்வின்றி கையாளுகின்றார் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.


இது வெளிப்படையான ஆத்திரமூட்டல் செயற்பாடாகும். டிரம்ப் தற்போது அறிவீனமும் விடாப்பிடி குணமும் கொண்ட ஒரு தலைவராகவே காணப்படுகின்றார். அதை அவர் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். அமெரிக்காவின் தலைமை பதவிக்கு வரும் ஆர்வம் கொண்ட பலருக்கு இந்த நோய் உள்ளது. அவர்கள் அந்தப் பதவிக்கு வந்த பின் இந்த நோயில் இருந்து விடுபடவும் முடியாது.


ஐக்கிய நாடுகள்; மனித உரிமை அமைப்பில் இஸ்ரேல் பலத்த கண்டனததுக்கு ஆளாகியுள்ளது. இவ்வாண்டு மார்ச் 30ம் திகதி வரை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் 15 பலஸ்தீன சிறுவர்கள் உற்பட 106 பேரை  கொன்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயித் றாத் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். இந்தக் காலப் பகுதிக்குள் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். இவர்களுள் குறைந்த பட்சம் 3500 பேர் ஜீவ வெடி பொருள்கள் தாங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சட்டங்களின் கீழ் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்புப் படை. இதே ஆக்கிரமிப்புச் சக்தி தான் காஸா மக்களின் நலன் காக்கவும் கடமை பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


ஆனால் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது பிறப்பு முதல் இறப்பு வரை விஷம் நிரப்பப்பட்ட சேறிக் கூண்டுகளுக்குள்ளேயே வாழ்ந்து மறைந்து வருகின்றனர். இஸ்ரேலிய அதிகாரிகளால் அவர்களின் கௌரவம் பறிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானத்துக்கு விரோதமாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். இந்த மக்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் அர்த்தம் உள்ளது என்பதை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளக் கூட இஸ்ரேல் அதிகாரிகள் தயாரில்லை.


'இஸ்ரேலை ஒரு நாடு என்ற அந்தஸ்த்தில் இருந்து நீக்கி விட வேண்டும். அதன் தலைவர்கள் 1948 முதல் புரிந்துள்ள அப்பாவி மக்களின் படுகொலைகளுக்காக சர்வதேச விசாரணைக்கு உற்படுத்த வேண்டும்' என காஸாவின் தென்பகுதி அகதி முகாமில் வாழும் 65 வயதான இப்றாஹிம் அபூ காலிப் தெரிவித்துள்ளார். 'இஸ்ரேல் எமது காணிகளை ஆக்கிரமித்துள்ளது. எமது மக்களை சொந்த இடங்களில் இருந்து துரத்தி அடித்துள்ளது. எமது பிள்ளைகளின் கனவுகளை சிதைத்துள்ளது. பாதுகாப்பாக வாழ வேண்டும் என்ற அவர்களின் ஆசைகளை குலைத்துள்ளது. எமது வறுமையையும் பட்டினி அவலத்தையும் கண்டும் காணாமல் குருடர்களாக அது உள்ளது' என அந்த முதியவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மத்திய கிழக்கின் நவீன வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் ஜெரமி சோல்ட் தனது 'ஜெரூஸலத்தில் கொண்டாட்டம் காஸாவில் படுகொலை' எனும் கட்டுரையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அதன் பலத்தை வெளிப்படுத்துகின்றது. அதைக் கொண்டாடி மகிழ்கின்றது. அமெரிக்கா அதன் சட்டைப் பைக்குள் கிடக்கின்றது.


அதனிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. எனவே எது தப்பாக முடியும் என்ற மமதையில் இஸ்ரேல் உள்ளது. அது எதை விரும்புகின்றதோ அதைச் செய்யும் ஆற்றலை அது கொண்டுள்ளது. காஸா வேலிகளுக்குள் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களை ஒரே தினத்தில் வேண்டுமானாலும் அதனால் கொன்று குவிக்கலாம். ஈரானியர்களையும், சிரியா மக்களையும் ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கலாம். தங்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் எனக் கருதும் பலஸ்தீனர்களை வெளிநாடுகளுக்குள் ஊடுறுவியும் கூட கொலை செய்யலாம். இதை எல்லாம் கண்டும் காணாமல் சர்வதேச சமூகமும் அதனை ஊக்குவித்து வருகின்றது. இதனால் தனது வெறுக்கத்தக்க நடத்தையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தேவையை அது உணராமல் இருக்கின்றது.


சர்வதேச சட்டங்களின் படி இன்னமும் ஆக்கிரிக்கப்பட்ட நகரமாக இருக்கும் ஜெரூஸலத்தில் அமெரிக்கா அதன் தூதரகத்தை திறந்துள்ளமை ஒரு குறும்புத் தனமான செயலாகும். இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட தினத்தின் கொண்டாட்டமும் அமெரிக்க தூதரக இடம் மாற்றமும் ஒரே தினத்தில் ஒரேயடியாக இடம்பற்றுள்ளன. மறுபுறத்தில் காஸா எல்லைப் பகுதியில் பலஸ்தீனர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் நெத்தன்யாஹு மட்டும் அல்ல ஆக்கிரமிக்கப்பட்ட நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்ததன் மூலம் பல மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவரது மகள் இவன்கா அவரது கணவர் குஷ்ணர், என எல்லோருமே குடும்பத்தோடு சர்வதேச சட்டங்களை மீறியுள்ளனர். பலஸ்தீன மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது இவர்கள் குடும்பத்தோடு புன்னகைப் பூத்தவாறு ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் தமது திட்டம் மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்த உதவும் என்று போதனை செய்துள்ளனர்.



சிறுவர்கள் உற்பட நிராயுதபாணிகளான பலஸ்தீனர்கள் பால், வயது வித்தியாசம் இன்றி இஸ்ரேலிய குறிபார்த்து சுடும் பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் வன்முறைகளுக்கு பலஸ்தீனர்கள் தான் காரணம் என்று டிரம்ப்பின் மருமகன் குஷ்ணர் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களை சுட்டு வீழ்த்திய இஸ்ரேலிய குறிபார்த்து சுடும் வீரர்களோ அல்லது அவர்களை தமது சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடித்த இஸ்ரேலின் தலைவர்களோ இதற்கு காரணம் அல்ல என்பது தான் அவரின் நிலைப்பாடு. இது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை விட கோரமானது. அதேநேரம் தற்போது இடம் பெற்றுள்ள படுகொலைகள் ஒன்றும் விதிவிலக்கானதும் அல்ல. 1948 முதல் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைத்து வரும் படுகொலைகளுக்கு இசைவாகத் தான் இதுவும் இடம்பெற்றுள்ளது.


இஸ்ரேலின் தலைநகர் ஜெரூஸலம் என்ற மாயை யதார்த்தத்துக்கு மேலால் போடப்பட்டுள்ள மெல்லிய முகமூடியாகும். ஜெரூஸலம் அல்லது அல்குத்ஸ் நகரம் பலஸ்தீனர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நகரம். 11ம் நூற்றாண்டில் சிலுவை யுத்தக்காரர்கள் இங்கு பிரவேசிக்கும் வரை அதன் பிறகு 20ம் நூற்றாண்டில் தற்போதைய யூதர்கள் இங்கு கால் பதிக்கும் வரை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என சகல சமயத்தவர்களுக்கும் இது திறவலான நகரமாவே இருந்தது.


இங்குள்ள ஆயிரம் வருடங்களைக் கடந்த கட்டிடங்கள் அணைத்திலும் முஸ்லிம்களினதும் கிறிஸ்தவர்களினதும் கைவண்ணம் பதிந்துள்ளது. இதில் யூதர்களுக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை. அதிலும் குறிப்பாக தற்போதுள்ள சியோனிஸ் யூத சக்திகளுக்கு கடுகளவேனும் கூட இதில் சம்பந்தம் இல்லை. தற்போதைய யூதர்கள் பலஸ்தீன மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்தவர்கள். அவர்களின் காணிகளை கபளீகரம் செய்தவர்கள்.


இஸ்ரேல் மத்திய கிழக்கிற்கு வன்முறையையும் அழிவையும் தவிர வேறு எதையும் கொண்டு வரவும் இல்லை. அறிமுகம் செய்யவும் இல்லை. பலஸ்தீனர்கள், சிரியா மக்கள், லெபனானியர்கள், ஜேர்தானியர்கள், ஈராக்கியர்கள், எகிப்தியர்கள், டியுனீஷியர்கள் என தமக்கு சவாலாகக் கருதிய எல்லோருக்கும் எதிராக அவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். களவு, கொள்ளை, கொலை, வஞ்சகம் என்பனவற்றின் மீது ஸ்தாபிக்கப்பட்ட ஒரு தேசம் தான் இஸ்ரேல். இவை தான் அவர்களின் ஆளும் கொள்கையாகவும் உள்ளன.


இது நாஸியின் ஜெர்மனி, நிறவெறி கொண்ட தென் ஆபிரிக்கா போன்ற ஏனைய இனவாத கருத்தியல்களில் இருந்து சற்று வித்தியாசப்பட்டது. முடிவற்ற அழிவுகளை உருவாக்கிக் கொண்டே தனது இருப்புக்கான உரிமையைக் கோரி வரும் ஒரு வித்தியாசமான இனவாதம். இந்த மனநோயால் பீடிக்கப்பட்ட அரசின் காரணமாக மனித குலப் பொறுமையின் எல்லா எல்லைகளையும் மத்திய கிழக்கு தாண்டி விட்டது.


மேற்கு ஜெரூஸலத்துக்கு தனது தூதரகத்தை மாற்;றி மத்திய கிழக்கில் மேலும் எரியும் நெருப்பை மூட்டிவிட்டுள்ள டிரம்ப்பின் அறிவீனமான, ஆபாசமான தீர்மானம் பற்றி Nடீஊ தொலைக்காட்சியின் கெல்பரி இப்படி வர்ணித்துள்ளார். 'திரையின் ஒரு புறத்தில்; நேர்திதியாக ஆடை அணிந்த அமெரி;க்க இஸ்ரேல் அதிகாரிகள் மறுபுறத்தில் விரக்தியும் வேதனையும் மரணமும் நெருப்பும்' எனக் குறிப்பிட்டுள்ளார். (முற்றும்)
'நரகம் தளர்வடைந்தது சொர்க்கம் அழுதது' 'நரகம் தளர்வடைந்தது சொர்க்கம் அழுதது' Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.