கிராமக் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை.. nt


கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன் கட்டுப் பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று (10) அகழ்வு பணி முன்னெடுக்கப் பட்டது.


கிராம விஸ்தரிப்பு திட்டக்காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவுப்பொலிஸார் இன்று (10) குறித்த இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.நீதிமன்ற பதிவாளர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிராமக் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை.. nt கிராமக் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை.. nt Reviewed by Euro Fashions on May 10, 2018 Rating: 5