சிங்கப்பூரில் இருந்து வந்த கண்டி நபரிடம் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கம்.


இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமான முறையில்
நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த சந்தேகநபரின் பயப் பொதியில் இருந்து இந்த தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து 02 கிலோவும் 100 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

46 வயதுடைய கண்டி, தெய்யன்வல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் விமான நிலையப் பொலிஸாரால் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து வந்த கண்டி நபரிடம் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கம். சிங்கப்பூரில் இருந்து வந்த கண்டி நபரிடம் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கம். Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5