கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா நேரத்தில் வீட்டில் இருந்த எனது உறவினர் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவம்.


கடந்த வெள்ளிக்கிழமை 04/05/18 வெல்லம்பிட்டிய லன்சியாவத்தையில் எமது உறவினருக்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவம்.
ஆண்கள் ஜும்ஆவிற்கு சென்றிருந்த வேளை, திடகாத்திரமான 2 சிங்களவன்கள் வீட்டின் பெல்லை அடித்து அண்மையில் இங்கு குடிவந்த முஹம்மத் என்பவர் இருக்கிறாரா என வினவியுள்ளான்.

 அப்படி யாரும் இங்கில்லை எனக் கூறவும் ஒருவன் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளான்.

மற்றையவன் லேனில் நின்றுள்ளான் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட எமது உறவுப் பெண்மணி கதவை தாழ்ப்பாளிட்டு சென்று தண்ணீர் கொண்டுவந்த கொடுத்த வேளை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளான்.

 தைரியசாலியான அவர் காலினால் கதவைத் தள்ளிப்பிடித்து தடுத்துக் கொண்டு நடந்த களேபரத்தில் கையிலிருந்த 2 பவுண் பிரஸ்லட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.

அல்ஹம்துலில்லாஹ். அவர்களது சதக்காக்கள் கொண்டு அல்லாஹ் பாதுகாத்தான்

வெல்லம்பிட்டி பொலிஸில் இதுகுறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதுபோல் முஸ்லிம்களை குறிவைத்து வேறு சம்பவங்களும் இடம்
பெற்றிருக்கலாம்.

வட்சப்பிலும் பேஸ்புக்கிலும் எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும் நம்மவர்கள் அஜாக்கிரதையாகவே இருக்கிறார்கள்.

ஆண்கள் தனித்திருக்கும் தம் வீட்டுப் பெணமணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளை எக்காரணத்தைக் கொண்டும் விற்பனை பிரதிநிதிகளோ மீட்டர் செக் பண்ணுபவர்களோ யார் வந்து அழைத்தாலும் கதவைத் திறக்காமல் பதிலளிக்குமாறு ஏவுங்கள்.

ஊர்களில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட  ஜும்மா பள்ளிகளில் தொழும் நேரங்களை முன் பின் படுத்துவதும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.

தகவல்: நியாஸ் அஹ்மத் ஸைனுலாப்தீன்
கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா நேரத்தில் வீட்டில் இருந்த எனது உறவினர் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவம். கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா நேரத்தில் வீட்டில் இருந்த எனது உறவினர் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவம். Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5