(படங்கள்) ரிப்கா தாஹாவின் முதலாவது ஓவியக் கண்காட்சி.


ரிப்கா தாஹாவின் முதலாவது ஓவியக் கண்காட்சி மே மாதம் 6ஆம் திகதி திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ரிப்கா தாஹாவின் ஓவியங்கள் மற்றும் கைப்பணிப் பொருட்கள் சுமார் 100 காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

விழாவின் பிரதம அதிதியாக ஊடகவியலாளர் சிராஜ் மஷ்ஹூர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.எம். எம். அஸ்மிர், தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் எம்.எப்.எம் ஸபீர், அம்வா பெண்கள் அமைப்பின் தலைவி பர்ஸானா ஹபீப், க்ரஸன்ட் சர்வதேச பாடசாலையின் அதிபர் மெஹ்ருபானு ரஸ்மில் மற்றும் அத்லா அமைவின் தலைவி பஸீனா ஸவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திஹாரி வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்ற இந்த ஓவியக் கண்காட்சியில் பெருந்திரழான மக்களள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை Happy Family நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வுடன் ஒன்றிணைந்தாக Happy Family நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் சித்திரப் பட்டரையும் அன்றைய தினம் திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையில இடம் பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பங்குகொண்டனர். பங்குபற்றிய குழந்தைகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.(படங்கள்) ரிப்கா தாஹாவின் முதலாவது ஓவியக் கண்காட்சி. (படங்கள்)  ரிப்கா தாஹாவின் முதலாவது ஓவியக் கண்காட்சி. Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5