கண்டி வன்முறையை கட்டுப்படுத்த செயல்பட்ட என்னை பயங்கரவாதியாக காண்பிக்க முயற்சிக்கின்றனர்.


கண்டி வன்முறையின் போது அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட என்னை இன்று
வியாழக்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைத்துள்ளனர். சமாதான முயற்சியில் ஈடுப்பட்ட பழிக்கு என்னை பயங்கரவாதியாக காண்பிக்க முயற்சிப்பதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நீதித்துறை திருத்த சட்டமூலம், தண்டனைச் சட்டகோவை திருத்தச் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்ட கோவை திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கண்டியில் மிகவும் வன்முறை ஏற்பட்ட போது அதனை கட்டுப்படுத்துவதற்கான நான் பெரும் முயற்சிகளை எடுத்தேன். அதனை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நன்கு அறிவார். அதேபோன்று ஏனைய முஸ்லிம் எம்.பிக்களும் அறிவர்.

இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவனால் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளது. சமாதான முயற்சியில் ஈடுப்பட்ட பழிக்கு என்னை பயங்கரவாதியாக காண்பிக்க முயற்சிகின்றனர்.

எனவே இந்த செயற்பாட்டை பழிவாங்கும் ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது. இதன்காரணமாகவே புதிய மேல் நீதிமன்றம் உருவாக்கும் சட்டமூலத்திலும் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பழிவாங்கும் நோக்குடனே குறித்த சட்டம் கொண்டு வரப்படுகின்றது என்றார்.
-Vidivelli
கண்டி வன்முறையை கட்டுப்படுத்த செயல்பட்ட என்னை பயங்கரவாதியாக காண்பிக்க முயற்சிக்கின்றனர். கண்டி வன்முறையை கட்டுப்படுத்த செயல்பட்ட என்னை பயங்கரவாதியாக காண்பிக்க முயற்சிக்கின்றனர். Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.