ஓட்டமாவடி - பதுரியாவில் மஸ்ஜித் திறப்புவிழாவும் மார்க்க சொற்பொழிவும்.


(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி - பதுரியா நகர் சந்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜித் திறப்புவிழா நிகழ்வும் ரமழானை வரவேற்போம் எனும் தலைப்பிலான விசேட மார்க்க சொற்பொழிவும் இன்ஷா அல்லாஹ் நாளை (10) ம் திகதி வியாழக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு இஷா தொழுகை வரைக்கும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தலைசிறந்த உலமாக்கள் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவுகளை வழங்கவுள்ளதால் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

பதுரியா சந்தியில் புதிதாக அமையப் பெற்றுள்ள மஸ்ஜிதின் தற்காலிக அமைவிடமானது அப்பிரதேச சகோதரர்களினால் மேற்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடு: தஃவாக் குழு பதுரியா, மாஞ்சோலை

(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி - பதுரியாவில் மஸ்ஜித் திறப்புவிழாவும் மார்க்க சொற்பொழிவும். ஓட்டமாவடி - பதுரியாவில் மஸ்ஜித் திறப்புவிழாவும் மார்க்க சொற்பொழிவும். Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5