வினைத்திறன் கொண்ட மண்ணின் மைந்தர்களை அடையாளம் காணுவோம்! #MYSWO


ஈமானின் கிளைகள் 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஈமான் என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும்.

அவற்றில் மிகச் சிறந்தது ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை’ என்ற சொல்லாகும்.

அவற்றில் கடைசியானது (மக்கள் நடமாடும்) பாதையில் இடையூறு தரும் பொருட்களை அகற்றுவதாகும். ‘வெட்கம்’ என்பதும் ஈமானின் ஒரு கிளையாகும். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி­) நூல் : முஸ்லி­ம்

நாங்கள் காட்டை,பாதையை,வடிகாலை மக்கள் நலன்கருதி சுத்திகரிப்பதும் ஈமானுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மடவளை பஸார் பிரதான வீதி வடிகால்  நீண்ட காலமாக சுத்திகரிக்கப்பட்டாமல்  (சிரமம் என்பதால்) கைவிடப்பட்டு குறிப்பாக மடவளை மக்களின் வரிப்பணத்தை வசூலிப்பதை அக்கரையோடு காரியமாற்றும் பிரதேச சபையினால் காலத்திற்கு காலம் சுத்திகரிக்க வேண்டிய வடிகால் கவணிப்பாரற்று இருந்த நிலையில்,


மடவளையில் சமூக நலன் நாடி ஆக்கபூர்வமான வேலைகளை செய்ய வேண்டும் என்ற நன்நோக்கில் அண்மையில் உருவான  Madawala Youth W.O என்ற பஸார் இளைஞர்களின் அமைப்பினூடாக மடவளை பிரதான வீதி நெடுகிலும் அமைந்துள்ள வடிகாலை சுத்திகரிக்கும் சிரமதான பணி நேற்று (13-05-2018) காலை 10:00 மணியளவில் தொடங்கி இரவு வரைக்கும் சுமார் 12 மணித்தியாலங்கள் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!.

#இளைஞர்களின் பொறுமை, மன உறுதி, விடா முயற்சி, சுயமாக சிந்தித்து நேர்த்தியாக கடமையாற்றும் திறன் அதற்கம் மேலாலாக "Team Work" என்பவற்றினூடாக தம்மை அடையாளப்படுத்தியுள்ளதை நாம் இனங்கண்டு கொள்ளவேண்டும்.

ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்களை ஊரிலுள்ள சகல பொறுப்புதாரிகளும் தவறாக (சுய இலாபங்களுக்காக) பயன்படுத்தாமல் அவர்களை நேரான வழியில் ஆக்கபூர்வமாக சமூக மேம்பாட்டை கட்டியெழுப்ப எப்பவோ செய்திருக்க வேண்டும். பரவாயில்லை. இப்பவாவது அவர்களாகவே முன்வந்திருப்பதை பாராட்டி தட்டிக்கொடுப்போம்.

#இந்த இடத்தில் 1975-19780 காலப்பகுதியில் எமதூரில் முதன் முதல் சாஜான் நானா தலைமையில் உருவாக்கப்பட்ட இளைஞர் அமைப்பை நினைவு கூறுவது பொறுத்தமாகப்பட்டது. காரணம் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை என்னால் உணர முடிந்தது.

இந்த அமைப்பு  தொடர்ச்சியாக செயல்படுவதற்கும் எதிர்காலத்தில் பின் தொடர்பவர்களுக்கு முன்மாதிரியாகவும் சில ஆலோசனைகள்;

•அல்லாஹவின் திருப்பொறுத்தமே நோக்கமாக இருக்கவேண்டும்.

•பலர் கருத்து சொல்ல முன் வருவார்கள். யாருடைய கருத்தாக இருந்தாலும் பொறுமையுடன் கேற்பதில் தவறில்லை.

•எந்த முடிவையும் தனியாக முடிவெடுக்காது அமைப்பில் கலந்துரையாடியே இறுதி முடிவை எடுக்கவும்.

•அமைப்பின் யாப்பு+தலைமைக்கு கட்டுப்பட பழகிக்கொள்ள வேண்டும்.

•எந்த காரணத்தைக் கொண்டும் பிழைக்கு பின்னால் போவதை, அதற்கு உருதுனையாக இருப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

•அமைப்புக்கென பொருளாதார ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். அதற்கான கணக்கு வழக்குகளை நேர்மையாகவும் துள்ளியமாகவும் வைத்திருங்கள். வீண் விரயம், பண துஷ்பிரயோகம் வேண்டாம்.

•இப்போது "பெயர் போட" பலர் வருவார்கள் விழிப்பாக இருந்து கொள்ளுங்கள்.
•உங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு பிரிந்துவிட வேண்டாம்.

• மார்க்கத்திற்கும், நாட்டு சட்டத்திற்கும் முரணான அவசியமற்ற விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து அநியாயத்தை தட்டிக்கேட்பதில் தவறில்லை.

உங்கள் பணி சிறப்பாக தொடர துஆச்செய்கிறேன்.

சுல்பி சமீன்,
14-05-2018.
வினைத்திறன் கொண்ட மண்ணின் மைந்தர்களை அடையாளம் காணுவோம்! #MYSWO வினைத்திறன் கொண்ட மண்ணின் மைந்தர்களை அடையாளம் காணுவோம்! #MYSWO Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.