டொனால்ட் ட்ரம்ப் - கிம் ஜோங் சந்திப்புக்கு இலங்கை வரவேற்பு.


அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையில் இடம்பெறவுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு
தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இது தொடர்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

வட கொரிய மற்றும் தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையில் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாதானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தி இதன்போது வெளியிடப்பட்ட அறிவிப்பையும் இலங்கை வரவேற்றுள்ளது.

அணுவாயுதமற்ற கொரிய தீபகற்பம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தையில் இணங்கப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதை இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 12ஆம் திகதி அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையில் சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள சந்திப்பு, மேற்குறித்த சந்திப்பில் இணங்கப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் பலப்படுத்தும் நோக்கில் அமையும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் - கிம் ஜோங் சந்திப்புக்கு இலங்கை வரவேற்பு. டொனால்ட் ட்ரம்ப் - கிம் ஜோங் சந்திப்புக்கு இலங்கை வரவேற்பு. Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5