கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்.


இந் நிகழ்வானது கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளர் கழகத்தின்
ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு  2018:05:09 புதன்கிழமை கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் எமது பாடசாலை  இளம் கண்டுபிடிப்பாளர் கழக  அங்கதவர்களுக்கு புத்தாக்குனர் சிந்தனையை விருத்தி செய்யவும், எதிர்காலத்தில் பல இளம் விஞ்ஞானிகள் சமுதாயத்தை  இப் பாடசாலையில் உருவாக்கவும் விரிவுரையாளர்களால் விரிவுயாற்றப்பட்டது

அத்துடன் எமது பாடசாலையானது  இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்கமூட்டி பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை நடாத்துவதில் சிறந்த பாடசாலையாக திகழ்கவதாக  இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழுவின் எழுத்து மூல  பாராட்டையும் பெற்றுள்ளது  மற்றும் சர்வதேச ரீதியில்  இளம் கண்டுபிடிப்பாளர்களை பங்குபற்ற செய்த பாடசாலையாகவும் திகழ்கிறது. மற்றும்  எதிர்காலத்தில்  இக் கழகத்தினால் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந் நிகழ்வில் விஷேட அதிதிகளாக விரிவுரையாற்ற தங்கவேல் சக்திகுமார் மற்றும் அவரது துனைவி சுதர்சினி சக்தி   ( மட்டக்களப்பு இளம் கண்டுபிடிப்பாளர் அமைப்பின் தலைவர் ) , ஏ. ஆதம்பாவா  ( முன்னாள்  இளம் கண்டுபிடிப்பாளர் கழகத்தின் பொறுப்பாசிரியர் ) அவர்களும்  அதிதிகளாக  எம். எஸ். முஹம்மட்   ( அதிபர் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை ), பிரதி அதிபர்கள், உதவி  அதிபர்கள், ஆசிரியர்கள் ,பழைய மாணவர் சங்கம் சார்பில் செயலாளர் ஏ. எம். ரிபாஸ், புத்தாக்குனர் கழக  தலைவர் ஏ. எம். எம். சவ்பாத்,  புத்தாக்குனர் கழக  அங்கதவர்கள், SDAWSO Srilanka  அங்கதவர்கள் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வானது கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளர் கழகம்,Kalmunai Zahira Oba,   SDAWSO SRILANKA  ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந் நிகழ்வை நேரடியாக வெளி உலகிற்கு காட்டுவதற்கு ஊடக அனுசரனையாக வியூகம் TV  முகநூல் தொலைக்காட்சியும் பங்கேற்றது.


( தகவல் : புத்தாக்குனர் கழகம் - ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை ஊடக பிரிவு, SDAWSO SRILANKA  )
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம். கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம். Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.