முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டல்... நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன்.


-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டலோ போதைப்பொருள்
வியாபாரத்திற்கு நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைப்பதற்கு   பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை  சனிக்கிழமை (12) காலை 8 மணிக்கு மேற்கொண்டவேளை அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவரது கருத்தில்
எமது முஸ்லீம் வட்டாரத்தில்  ஜின்னா வீதியில் திடிரென நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படுவதாக மககள் என்னிடம் முறையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற நான்  இந்த விடயம் பாராதூரமானது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து எனது ஆதங்கத்தை தெரிவித்தேன்.அத்துடன் குறித்த ஹோட்டல் அமைக்கப்படுவது முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம்.அது மாத்திரமன்றி பள்ளிவாசல்கள் அருகில் பல இருக்கின்றன.300 மீற்றருக்கு யாழ் ஒஸ்மானியா கல்லூரி கதிஸா பெண்கள் பாடசாலை  கூட இருக்கின்றது.எனவே இவ்வாறான ஹோட்டல்கள் பொது இடங்கள் இருக்கின்ற இடங்களில் அமைக்கப்படுவது சட்டவிரோதமானது.தற்போது எமது மாநகர சபை மற்றும் எனது சக உறுப்பினர்கள் போதைப்பொருளை கட்டுப்படுத்தல் தொடர்பாக அக்கறை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறான ஹோட்டல்கள் எமது கலாச்சாரத்தை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.


போரினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள எமது வாழ்வாதாரம் பாதுகாக்க என்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். இதனால் எமது பகுதியில் நட்சத்திர ஹோட்டலோ போதைப்பொருள் வியாபாரத்திற்கு நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன் என கூற விரும்புகின்ன்றென்.தற்போது  யாழ் மாநகர சபையின் கல்வி  விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எனக்கு நிறைய பொறுப்பக்கள் இருக்கின்றது.


இதன் மூலம் யாழ் மக்களுக்கு சிறந்த கல்வித் திட்டங்களையும் இளைஞர்களுக்கான விளையாட்டுக்கான சகல வசதிகளையும் மேம்படுத்தி இதன் மூலம் பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை தேசிய மட்டத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.குறித்த ஹோட்டல்  தொடர்பாக முதலமைச்சர் யாழ் கிளிநொச்சி ஜம்மியதுல் உலமா கிளை க்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளேன். என மேலம் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டல்... நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன்.  முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டல்... நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன். Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.