மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில், 17 வயது பெண் உயிரிழப்பு. #சம்பூர்


-அப்துல்சலாம் யாசீம்-
சம்பூர்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபரிச்சான் பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள்
வேகக்கட்டுப்பாட்டை இழந்து  மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயது பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர்  படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து, நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும், முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணிண் சடலம், தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த பெண் சகோதர (தமிழ்) இனத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில், 17 வயது பெண் உயிரிழப்பு. #சம்பூர் மோட்டார் சைக்கிள்  மின்கம்பத்துடன் மோதியதில், 17 வயது பெண் உயிரிழப்பு. #சம்பூர் Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5