வெளியானது அறிக்கை... நாட்டில் சனத்தொகை வளர்ச்சி வருடாந்தம் 3 இலட்சத்தினால் வீழ்ச்சி.


சிங்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முஸ்லிம்களால் வில்லைகள் பயன்படுத்தப்பட்டு
வருவதான சர்ச்சை கடந்தகாலங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. அது காலி, அம்பாறையில் பாரிய அழிவுகளுக்கு வழிவகுத் தது.

பின்னர் அதுகுறித்த ஆய்வுக ளுடன் அப்போலிக் கருத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், அண்மையில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் பொதுவாக மக்கள் பெருக்கம் வீழ்ச்சிகண்டு வருவதாக தகவல் வெளியாகி யிருக்கிறது.  -மடவளை நியூஸ் -

விஞ்ஞான ரீதியாக ஆய்வினை மேற்கொண்டே மேற்படி பொறுப்புவாய்ந்த தரவுகளை மத்தியவங்கி வெளியிட்டுள் ளது.

சிங்கள இனம் மட்டுமல்ல, பொதுவாக நாட்டிலுள்ள சகல இனமக்களின் வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்து வருவதையே அவ்வறிக்கை பகிரங்கப்படுத் தியுள்ளது.


இலங்கையின் சனப்பெருக் கத்தில் ஆண்டுதோறும் மூன்று இலட்சம் அளவிலான மக்கள் தொகையினர் அருகி வருவதாக திடுக்கிடும் தகவலை மத்திய வங்கி தந்திருக்கிறது.

பிறப்பு வீதம் இப்படிக் கீழிறங்கிவரும் நிலையில் இறப்பு வீதமும் வருடம் தோறும் அதிகரித்து வரும் மற்றொரு அபாய அறிவிப்பையும் ஆய்வு வெளியிட்டிருக்கிறது.

மத்தியவங்கியின் 2017 ஆம் ஆண்டறிக்கையிலேயே மேற்படி தகவல்கள் தரப்பட்டுள் என, 2016 ஆம் ஆண்டில் நாட்டின் பிறப்பு வீதம் 1000 பேருக்கு . 15.6 என்ற விகிதத்தில் இருந்துள் ளது. அது 2017 ஆம் ஆண்டில் 1000 பேருக்கு 15.2 என்ற விகி தத்தில் குறைந்துள்ளது. பிறப்பு வீதம் இவ்வாறிருக்கையில் இறப்பு வீதமும் இதற்கு சமாந்தர் மாக அதிகரித்துச் செல்வதையே தரவுகள் காட்டுகின்றன, 2016 இல் 1000 பேருக்கு 6.2 என்ற விகிதத்திலிருந்த இறப்பு வீதம் 2017 இல் 6.5 என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது.


பிறப்பு வீதம் குறைந்தும் இறப்பு வீதம் உயர்ந்தும் போவ தற்கான காரணத்தைக் கண்ட றிவதற்கு குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உதவியை நாடி யபோது, இலங்கையின் பிறப்பு வீதத்தில் சில தசாப்தங்களாகவே வீழ்ச்சிகண்டு வருவதாக அங் குள்ள உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்,

1976 ஆம் ஆண்டி லிருந்தே இவ்வீழ்ச்சி நிகழ்ந்து  வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டு யுத்தம் நடைபெற் றுக்கொண்டிருந்த 30 வருட காலத்தில், பிறப்பு, இறப்புக் கணக்கெடுப்பு ஒழுங்காக இடம்பெறவில்லை.

ஆனால் யுத்தத்தின் பின்னரான அண்மைக் காலத்தில் முறையான கணக்கெ டுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் வெளி யிட்டார்,  1964 ஆம் ஆண்டில் 8.8 வீதமாக இருந்த இலங்கையின் மரணவீதம் சில வருடங்களுக்கு முன்புவரை அதே அளவில் இருந்து 5.3 என்ற வீதத்தில் குறைவு கண்டிருந்தது. ஆனால், அது இப்போது 6.5 வீதமாக உயர்வடைந்து வருவதைக் காண முடிகிறது.


பொதுவாக உலகளவிலேயே பிறப்பு வீதம் குறைந்து வருவதாக குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிவியல் துறையில் வளர்ச்சி யடைந்த குடும்பங்கள் குடும் பக்கட்டுப்பாட்டினை பின் பற்றியமையே பிறப்பு வீதம் வீழ்ச்சியடையக் காரணமாகும். 1960 களிலிருந்தே எமது நாடும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தது.


இதே காலப்பகுதியில் குடும்பக் கட்டுப்பாட்டு முறை யினை மேற்கொண்ட நாடுக . ளுடன் ஒப்பிடுகையில், எமது நாடு இலக்கினைத் துரிதமாக வெற்றிகொண்டு முன்னணி வகித்தது.

இது விடயமாக முன் னெடுக்கப்பட்ட பிரசாரப்பணிகள் வெற்றிகரமாக அமைந்ததுடன், மக்களிடையே கல்வித்துறை வளர்ச்சியும் ஆசிய நாடுகளி டையே எமது நாடு உயர்ந்து காணப்பட்டதாலும் இத்திட்டம் வெற்றியடைந்தது. அத்துடன் ஆசிய வலய நாடுகள் மத்தியில் பொருளாதாரத்திலும் எமது நாடு ஓரளவு முன்னுக்கு இருப் பதாலும் குடும்பக்கட்டுப்பாடு இங்கு வெற்றியளித்துள்ளது. இதனாலேயே இங்கு பிறப்பு வீதம் குறைந்துள்ளது.


மத்தியவங்கி இவற்றுக்குப் புறம்பாக இன்னும் தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு இலங். கையின் படிப்பறிவு வீதம் 93.2% ஆக இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் அது 93, 1% வீதமாக குறைந்துள்ளது. உடல் வலு பங்களிப்பில் 2016 இல் ஆண்களின் ஈடுபாடு 75, 1% வீதமும் 2017 இல் அது 74.5% வீதமாகவும் இழிவடைந்துள்ளது. அதேவேளை 2016 இல் இருந்த தைவிட 2017 இல் பெண்களின் மெய்வலு பங்களிப்பு 1.3% வீதத்தால் உயர்ந்துள்ளது. இது பெண்கள் வீடுகளில் தங்காது வேலைக்கு சென்றுள்ளமையின் அதிகரிப்பையே காட்டுகிறது. இதுவும் பிறப்புவீதம் குறையக் காரணமாக அமைந்துள்ளது.


இது விடயமாக கொழும்பு, பல்கலைக்கழக மக்கள் வைத் திய விஞ்ஞானத்துறை பிரிவின் பேராசிரியர் இந்ரலால் த சில்வா கருத்துத் தெரிவிக்கையில் கூறிய தாவது,


"வயதாவோர் வீதம் அதிக ரிக்கும்போது மரண வீதமும் அதிகரிக்கவே செய்கிறது.

இந்த அதிகரிப்பு வருடா வருடம் மரண வீதத்திலும் அதிகரிப்பை உண்டு பண்ணிவிடுகிறது. மரண வீதம் உயர்வடைய வயதே றுவோர் தொகை அதிகரிப்பே காரணமன்றி சுகாதாரத்துறையின் பலவீனம் என்பது காரணமல்ல. முதுமையடைவது அதிகரிக் கவும் பிறப்பு வீதம் குறையவும் பல காரணங்கள் உள்ளன. ஆண்களைவிடப் பெண்களின் தொகை அதிகரிப்பு, பெண்கள் மணம் முடிக்கும் வயது கூடுவது. போன்ற காரணங்களை பேராசி ரியர் இந்ரலால் த சில்வா முன் வைக்கிறார்.


இந்நிலையில், இலங்கையில் இனப்பெருக்க வீதம் தாழ்ந்து போவதற்கு குடும்பக்கட்டுப் பாட்டு முறைமை மீது மட்டும் பழியைச் சுமத்துவது தவறு. என்று இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் வைத்தியப் பணிப் பாளர் ஹரிச்சந்திர யகந்தலாவ கூறினார். அவர் மேலும் தெரி விக்கையில், "1960 ஆம் ஆண்டு காலப்ப குதியில் இலங்கையில் இருந்த சூழ்நிலையில் அப்போது குடும்பத்திட்டமிடல் அவசியப் பட்டிருந்தது. எமது நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகள் எல்லாவற்றிலும் போல அத் தேவை அவசியப்பட்டது.

இது விடயமாக ஒருசில நாடுகள் கடும் சட்டதிட்டங்களை கூட பிர. யோகித்திருந்தன. மக்கள் அறிவு வளர்ச்சியடைந்தபோது குடும்பத் திட்டமிடலை அவர்களே வலிந்து மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குழந்தைப் பிறப்புக்களின் இடைவெளியை அதிகரித்துக் கொள்ளவும் தலைப் பட்டனர்.


தற்போது இலங்கையில் 65% வீதமானோர் எந்த வகையி லேனும் குடும்பத்திட்டத்தைக் கையாண்டு வரும் நிலையிலுள் ளார்கள். இதற்குப் புறம்பாக 15% வீதமானோர் குழந்தைப் பேறின்றியும் வாடும் நிலையும் உள்ளது. இவற்றுக்கிடையே நாம் மறுக்கவும் மறக்கவும் முடியாத மிகவும் குறிப்பிடத்தக்க காரணியொன்றுள்ளது.

அதாவது, பிள்ளைகள் பெறக்கூடிய இளம் வயதுப் பெண்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொகையினர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிறப்பு வீதம் குறைய இதுவும் பிரதான காரணமெனலாம்.


மேலும் குடும்பத்திட்ட முறைமையை இலங்கையிலுள்ள அனைத்து இனத்தவர்களும் பின்பற்றவே செய்கின்றனர். இதில் சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் என்று. விதிவிலக்கின்றி கடைப்பிடித்து வருவதும் மறுப்பதற்கில்லை " என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: ஞாயிறு லக்பிம

வெளியானது அறிக்கை... நாட்டில் சனத்தொகை வளர்ச்சி வருடாந்தம் 3 இலட்சத்தினால் வீழ்ச்சி. வெளியானது அறிக்கை... நாட்டில் சனத்தொகை வளர்ச்சி வருடாந்தம் 3 இலட்சத்தினால் வீழ்ச்சி. Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5