சட்டம் அனுமதித்தாலும் சமூகம் அனுமதிக்காது. இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஐயூப் அஸ்மின் முழக்கம்.


யாழ் முடியிருப்புப் பகுதிகளில் ரெஸ்டோரன்ட் மற்றும் லொட்ஜ் 
அமைப்பதற்கு எதிரான தமிழ் முஸ்லிம் மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1:30மணியளவில் ஜின்னா வீதி ஹலீமா ஒழுங்கைச் சந்தியில் குளோபல் டிரேடிங்  சொலூஷன் நிறுவனத்தினால் அமைக்கப்படவிருக்கும் ஆடம்பர ஹோட்ட நிர்மானத்தைக் கண்டித்து அப்பிரதேச மக்கள் அமைதிப் பேரணியொன்றினை நடாத்தியிருந்தார்கள், இப்ப்பேரணியின் போது பிரதேச மக்களால் தீர்மானமொன்றும் வாசித்து நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளர் மஹானாஸ் அவர்கள் வாசித்தார்
யாழ்ப்பாணம் கிராம சேவையாளர் பிரிவி ஜே86,87 (13ம் வட்டாரம்) மக்களின் ஏகோபித்த தீர்மானம். காலம் 25-05-2018 வெள்ளிக்கிழமை.

அதிமேதகு மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதி அவர்கள்,
மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்கா பிரதமர் அவர்கள்,
மாண்புமிகு ரெஜினோல்ட் குரே வடக்கு மாகாண ஆளுனர் அவர்கள்,
மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள்,
மாண்புமிகு சம்பிக ரணவக்க நகர திட்டமிடல் அமைச்சர் அவர்கள்,
மாண்புமிகு இமானுவேல் ஆனல்ட் யாழ் மாநகர முதல்வர் அவர்கள்,

13ம் வட்டார தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாம் அமைதியான குடியிருப்புப் பிரதேசமொன்றிலே ஐக்கியமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றோம்; எமது பிரதேசத்தில் பாலர் பாடசாலைகள், பாடசாலைகள், புனித வணக்கஸ்தலங்கள் என்பன சூழ்ந்து காணப்படுகின்றன.  எமது மக்களின் அமைதியான, சகவாழ்வோடு கூடிய வாழ்வுமுறையை சிதைக்கும் வகையில் எமது பிரதேசங்களில் அண்மை நாட்களாக வர்த்தக முயற்சிகள் என்னும் போர்வையில் ஒரு சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்முன்னெடுப்புகளானது

v  எமது மக்களிடையே போதைவஸ்துப்பாவனையை அறிமுகம் செய்வதும், எமது பிரதேசத்தை மதுப்பாவனைக்குரிய, போதைவஸ்துப் பாவனைக்குரிய பிரதேசமாக மாற்றியமைக்கும் நோக்கிலானவை என்பதை நாம் அறிகின்றோம்.
v  எமது பெண்கள், சிறுவர்களின் அமைதியான கலாசாரக் கட்டுப்பாட்டோடு கூடிய வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் நோக்கிலானவை என்பதை நாம் அறிகின்றோம்.
v  எமது மக்களின் அமைதியான குடும்பவாழ்வை சீர்குலைக்கின்ற, சமூகங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி அமைதியின்மையை ஏற்படுத்த வல்லன என்பதையும் அறிகின்றோம்.

எனவே இவ்வடிப்படைகளை அறிந்துகொண்டுள்ள மக்களாக நாம்

Ø  எமது மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் பாரிய வர்த்தக நோக்கிலான கட்டிடங்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்றும்;
Ø  ஏற்கெனவே இயங்கிவருகின்ற சட்டவிரோத லொட்ஜ்கள், தங்குமிடங்கள், களியாட்ட நிலையங்களை உடனடியாக மூடிவிடவேண்டும் என்றும்;
Ø  போதைவஸ்துப்பாவனையற்ற மதுபானப் பாவனையற்ற குடியிருப்புப் பிரதேசமாக எமது பிரதேசத்தை தொடர்ந்தும் பேணுவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும்;

இப்பிரதேச மக்களாகிய நாம் 25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல 01:30மணிக்கு தன்னார்வமாக ஒன்றிணைந்து இத்தீர்மானங்களை நிறைவேற்றுகின்றோம்; இத்தீர்மானங்களை தங்களின் மேலான கவனத்திற்கும் கொண்டுவருகின்றோம்; இத்தீர்மானங்களின் அடிப்படையில் தாங்கள் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, இதன்போது யாழ் மாநகரசபை உறுப்பினர்களான கே.எம்.நியாஸ் (நிலாம்) எம்.எம்.நிபாஹிர், செல்வவடிவேல் ஆசிரியர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். சமூகத் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிர்வாகிகள் உலமாக்கள் இளைஞர்கள், பெண்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்திருந்தனர். 

தகவல் எம்.எல்.லாபிர்
சட்டம் அனுமதித்தாலும் சமூகம் அனுமதிக்காது. இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஐயூப் அஸ்மின் முழக்கம். சட்டம் அனுமதித்தாலும் சமூகம் அனுமதிக்காது. இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஐயூப் அஸ்மின் முழக்கம். Reviewed by Euro Fashions on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.