ஆம்புன்ஸ் மோதி, இளைஞர்கள் இருவர் ( சகீர் - ஆஷிக் ) காயம்.


ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதி வைத்தியசாலை
எதிரே மோட்டார் சைக்கிள் மீது அம்பியுலன்ஸ் மோதி மருதமுனையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று பகல் மருதமுனையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஓட்டமாவடி நோக்கி பயணிக்கையில் , மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்து மாவடிவேம்பு வைத்தியசாலையை நோக்கி வந்த அம்பியுலன்ஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்து மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மோட்டார் சைக்கிளில் பயணித்த  மருதமுனையை சேர்ந்த சகீர் (27வயது) ஆஷிக் (24வயது) ஆகிய இருவருமே காயங்களுடன் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

(தகவல் சகோ. ஹாரிஸ்)
ஆம்புன்ஸ் மோதி, இளைஞர்கள் இருவர் ( சகீர் - ஆஷிக் ) காயம். ஆம்புன்ஸ் மோதி, இளைஞர்கள் இருவர் ( சகீர் - ஆஷிக் ) காயம். Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5