நன்னீர் மீன்வளர்பை மேம்படுத்த பொத்துவில் செம்மணிக்குளத்தில் ஒருஇலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.


பொத்துவில் செம்மணிக்குளத்தில் நன்னீர் மீன்வளர்புத் திட்டத்தினை மேம்படுத்த ஒருஇலட்சம்
வளர்ப்பு மீன்குஞ்சுகள் குளத்தில் இடும் நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது.

செம்மணிக்குள கிராமிய நன்னீர் மீனவர் அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட. இந்நிகழ்வானது கிராமிய நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மீன்பிடி அமைச்சின் அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளரின் வழிகாட்டலுக்கமைவாக பிரதேச மீன்பிடிப் பரிசோதகர் திரு -  ரவிகுமாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

செம்மணிக்குள மீனவ அமைப்பின் தலைவர் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ எ.எஸ்.அப்துல் வாஸித் கௌரவ அதிதி பொத்துவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜீ.யூ.வசந்தகுமார மற்றும் சிறப்பதிதிகள் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


நன்னீர் மீன்வளர்பை மேம்படுத்த பொத்துவில் செம்மணிக்குளத்தில் ஒருஇலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. நன்னீர் மீன்வளர்பை மேம்படுத்த பொத்துவில் செம்மணிக்குளத்தில் ஒருஇலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.