பூஜாபிட்டிய பிரதேச செயலக பிரிவின் ஒரு தொகுதியை அக்குரனையுடன் சேர்க்கும் முடிவுக்கு எதிர் பிரேரணை நிறைவேறியது.


(மொஹொமட்  ஆஸிக்)
மாகாண சபை தேர்தலின் போது பூஜாபிட்டிய  பிரதே​​ச  செயலக பிரிவை இரண்டாக  துண்டித்து
ஒரு தொகுதியை அக்குறணையுடனும் மற்றைய  பகுதியை  ஹத்தரலியத்தவுடனும் சேர்ப்பதற்கு எல்லை நிர்னயக் குழு எடுத்துள்ள முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் பிரேரனை ஒன்றை பூஜாபிட்டிய பிரதேச சபை இன்று நிறை வேற்றியது.


பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர்  அனுர மடலுஸ்ஸ இப் பிரேரனையை  முன் வைத்து உரையாற்றிய போது,    மாகாண சபை தேர்தலின் போது பூஜாபிட்டிய பிரேதே​ச செயலக பிரிவை இரண்டாக துண்டாட  தீர்மானிக்க  ப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் எவரிடனும் ஆலோசனை பெறவில்லை. ஆகவே இது இப் பிரதேச மக்களுக்கு செய்துள்ள கடும் துரோகமாகும் என்றும அவர் இங்கு தெரிவித்தார்.


இப் பிரேரனை பிரதேச சபையில் இன்று 15 ம் திகதி ஏகமனதாக நிறைவேறியதுடன் இது தொடர்பான விவாதம் எதிர்வரும் சபையின் கூட்டத்தில் நடாத்துவதற்காகவும் தீர்மானிக்கப்பட்டதாக சபையின்  தலைவர் அனுர பிரநான்து தெரிவித்தார்.

-ஆஸிக்-


பூஜாபிட்டிய பிரதேச செயலக பிரிவின் ஒரு தொகுதியை அக்குரனையுடன் சேர்க்கும் முடிவுக்கு எதிர் பிரேரணை நிறைவேறியது.  பூஜாபிட்டிய பிரதேச செயலக பிரிவின் ஒரு தொகுதியை அக்குரனையுடன் சேர்க்கும் முடிவுக்கு எதிர் பிரேரணை நிறைவேறியது. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5