அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் கதைப்பதற்கு கோத்தபாயவுக்கு எந்த அருகதையும் இல்லை .


(எம்.ஆர்.எம்.வஸீம்)
அர­சாங்கம் தவ­று­களை திருத்­திக்­கொண்டு முன்­னுக்கு செல்­லா­விட்டால் மீண்டும் ராஜபக்ஷ
காலத்தில் இடம்­பெற்ற அரா­ஜக ஆட்­சியே தலை­தூக்கும். அத்­துடன் அர­சியல் வாதிகள் மற்றும் அரச அதி­கா­ரி­களின் தூய்மை தொடர்­பாக கதைப்­ப­தற்கு கோத்­த­பா­ய­வுக்கு அரு­க­தை­யில்லை என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் கொழும்பு மாந­க­ர சபை உறுப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் கடந்த 3 வரு­டங்­க­ளாக மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களில் அதி­க­மான விட­யங்­களை மேற்­கொள்ள தவ­றி­யுள்­ளது. ஊழல் மோச­டி­களை இல்­லா­ம­லாக்­கு­வ­தாக தெரி­வித்து அதி­கா­ரத்­துக்கு வந்த, இந்த அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களே ஊழல் மோச­டி­களில் தொடர்­பு­பட்டு மாட்­டிக்­கொண்­டுள்­ளனர். அதனால் அர­சாங்கம் எஞ்­சி­யி­ருக்கும் காலப்­ப­கு­தி­யி­லா­வது தவ­று­களை திருத்­திக்­கொண்டு மக்கள் எதிர்­பார்க்கும் வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்­ள­வேண்டும்.

அத்­துடன் தற்­போது நாட்­டுக்குள் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பது தொடர்­பாக பர­வ­லாக பேசப்­பட்டு வரு­கின்­றது. கூட்டு எதி­ரணி இதனால் 3 பிரி­வு­க­ளாக பிளவு பட்­டி­ருக்­கின்­றது.

அதில் ஒரு பிரி­வினர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவை ஆத­ரிக்­கின்­றனர். இன்னும் சிலர் பஷில் ராஜ­பக் ஷவே ஜனா­தி­பதி வேட்­பாளர் என தெரி­விக்­கின்­றனர். அதே­போன்று சமல் ராஜ­பக்ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என தெரி­விக்­கின்­றனர். அதிலும் குறிப்­பாக தேசிய அர­சாங்­கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் 16 பேரும் இந்த விட­யத்தில் முரண்­பட்ட கருத்­துக்­க­ளையே தெரி­வித்து வரு­கின்­றனர்.

 இவர்கள் அர­சாங்­கத்தில் இருந்து விலகி செல்­லும்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தா­கவே தெரி­வித்­தனர். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை தெரி­வு­செய்­வ­தற்கு பதி­லாக ராஜ­பக் ஷ­வி­னரை மீண்டும் அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வ­ரவே முயற்­சிக்­கின்­றனர். அதனால் அர­சாங்கம் இது­வரை செய்­து­வந்த தவ­று­களை திருத்­திக்­கொண்டு மக்கள் எதிர்­பார்க்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளா­விட்டால் மீண்டும் ராஜ­பக் ஷ­வி­னரின் அரா­ஜக ஆட்­சியே தலை­தூக்கும் அபாயம் ஏற்­படும்.

கோத்­த­பாய ராஜபக் ஷ, அர­சியல் வாதி­களும் அதி­கா­ரி­களும் தூய்­மை­யாக வேண்டும் என்றும் அர­சி­யலில் ராஜபக் ஷ குடும்பம் சிறந்த முன்­மா­திரி என்றும் தெரி­வித்­துள்ளார்.

ராஜ­பக் ஷ­வி­னரின் கடந்த கால அர­சியல் அதி­கார துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் மக்களுக்கு தெரியும். அரச அதிகாரியாக இருந்த கோத்தபாய ராஜபக் ஷ கொழும்பு மாநகரசபை அதிகார பிரதேசத்தில் என்னசெய்தார் என்பதும் மக்களுக்கு தெரியும். அதனால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் கதைப்பதற்கு கோத்தபாயவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் கதைப்பதற்கு கோத்தபாயவுக்கு எந்த அருகதையும் இல்லை . அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் கதைப்பதற்கு கோத்தபாயவுக்கு எந்த அருகதையும் இல்லை . Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.