மன்னார் மீனவர்களால் பிடிக்கப்பட்ட அரியவகை மீன்.


சூரிய மீன் என்று அழைக்கப்படும் அரியவகை மீன் மன்னார் வளைகுடா பாம்பன் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.

பாம்பனிலிருந்து நாட்டுப்படகில் மன்னார் வளைகுடா கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் அரிய வகையான சூரிய மீன் சிக்கியுள்ளது.

இந்த அரிய வகை மீனை மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த மீனின் பெயர் சன் ஃபிஷ் (Sun Fish).

இந்த மீன் அதிக பட்சம் 3 மீட்டர் நீளம் கொண்டது. 2 தொன் எடை வரையில் வளரும் தன்மை கொண்டது.

இந்த சூரிய மீன் நண்டு, சிப்பிகள், இறால் ஆகியவற்றை விரும்பி உண்ணும்.

பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்படுவது மிகவும் அரிதாகும்.

இந்த மீன் உண்பதற்கு உகந்ததல்ல.
மன்னார் மீனவர்களால் பிடிக்கப்பட்ட அரியவகை மீன்.  மன்னார் மீனவர்களால் பிடிக்கப்பட்ட அரியவகை மீன். Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5