சோதனை செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டில் இருந்து சிக்கியவைகள்.


மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற
சோதனையில், பல இலட்சம் மதிப்பிலான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் மலேசிய பொலிஸார் கடந்த 2 நாட்களாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நவீன கைப்பைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல இலட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மலேசிய பொலிஸார் தெரிவிக்கையில்,

நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான இடத்திலிருந்து விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள், கைக்கடிகாரம் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இது தொடர்பில் மலேசிய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கையில், கைப்பற்றபட்ட பணம், நகைகளின் மதிப்பை தற்போது வெளியிட முடியாது, மீதமுள்ள பைகளையும் சோதனை செய்து அவற்றின் மதிப்பையும் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் மலேசியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சோதனை செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டில் இருந்து சிக்கியவைகள். சோதனை செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டில் இருந்து சிக்கியவைகள். Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5