சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வந்ததால், கட்டாக்காலி நாய்களை பிடித்து கொல்லும் வேலைக்கு ஆள்சேர்ப்பு நிறுத்தப்பட்டது.


கொழும்பு மாநகரசபையில் வெற்றிடமாகியிருந்த நாய் பிடித்தல் மற்றும் நாய்களை அழித்தல்
தொடர்பான பதவிகளுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் இதற்கு எதிர்ப்புகள் தெரிக்கப்பட்டு வருவதால், அதனை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் நகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பதவிகள் உள்ளிட்ட 9 பதவிகளுக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான, விளம்பரங்கள் கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக  கொழும்பு மாநகரசபை விலங்குகளை கொள்வதாக, குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் நாய்களை கொல்வதற்கான பதவிகளுக்கு யாரையும் இணைத்துக்கொள்ளவில்லையென நகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வந்ததால், கட்டாக்காலி நாய்களை பிடித்து கொல்லும் வேலைக்கு ஆள்சேர்ப்பு நிறுத்தப்பட்டது. சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வந்ததால், கட்டாக்காலி  நாய்களை பிடித்து கொல்லும் வேலைக்கு ஆள்சேர்ப்பு நிறுத்தப்பட்டது. Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5