மாளி­கா­வத்தை குழந்தை உஸ்மான் ஹிக்கம் உயிரிழந்த விவகாரம்.. போலீஸ் விசாரணையில் "தாயார்" கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.


(எம்.எப்.எம்.பஸீர்)
மாளி­கா­வத்தை - ஹிஜ்ரா மாவத்தை, தொடர்­மாடி குடி­யி­ருப்பில் இரண்டு வயது குழந்தை
கொல்­லப்­பட்ட சம்­பவம் தொடர்பில் வளர்ப்பு தாய், தந்தை இரு­வ­ரையும் எதிர்­வரும் 24ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராலக நேற்று உத்­த­ர­விட்டார்.

நேற்று முன்தினம் இரவு கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரை­யுமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார். மொஹம்மட் அலீ மொஹம்மட் உஸ்மான் ஹிக்கம் எனும் 2 வயது பாலகன் மர்­ம­மாக உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் குழந்தையின் சட­லத்தை அடக்கம் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்தபோது பொலி­ஸா­ருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்­றுக்கு அமை­வாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட நிலையில், குழந்தை கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

கடந்த 14 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு மாளி­கா­வத்தை - ஹிஜ்ரா மாவத்தை தொடர்­மாடி குடி­யி­ருப்பில் மர்­ம­மாக உயி­ரி­ழந்த குழந்தை ஒன்றின் சட­லத்தை பிரேத பரி­சோ­தனை எதுவும் செய்­யாது அடக்கம் செய்ய அவ­ரது பெற்றோர் தயா­ரா­வ­தாக பொலி­ஸா­ருக்கு 119 அவ­சர தொலை­பேசி அழைப்பு இலக்கம் ஊடாக தகவல் கிடைத்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அது தொடர்பில் மாளி­கா­வத்தை பொலிஸார் உட­ன­டி­யாக செயற்­பட்டு குறித்த தொடர்­மாடி வீட்­டுக்கு சென்று அங்கு நிலை­மை­களை ஆராய்ந்­துள்­ளனர்.

பொலிஸார் அவ்­வீட்­டுக்கு சென்றபோது மொஹம்மட் அலீ மொஹம்மட் உஸ்மான் ஹிக்கம் எனும் 2 வயது குழந்தை உயி­ரி­ழந்­துள்­ள­மையை தெரிந்­து­கொண்­டனர்.

இது தொடர்பில் அங்கு பெற்றோர் என முன்­னி­லை­யான இரு­வ­ரி­டமும் பொலிஸார் செய்த விசா­ர­ணை­களில் குழந்தைக்கு சீனி அதி­க­ரித்­ததால் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கூறி­யுள்­ளனர்.

 இத­னை­ய­டுத்து பொலிஸார் குழந்தையின் சட­லத்தை பரி­சோ­தித்தபோது, இடது காலில் தீக்காயம் இருப்­பதை அவ­தா­னித்­துள்­ளனர். இதனால் பொலி­ஸா­ருக்கு மர­ணத்தில் சந்­தேகம் ஏற்­ப­டவே, கொழும்பு மேல­திக நீதி­வா­னுக்கு (புதுக்­கடை 4 ஆம் இலக்க நீதிவான்) அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளனர்.

இதன்­போது குழந்தையின் சட­லத்தை பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த நீதிவான் உத்­த­ர­விட்­டுள்­ள­துடன், நேற்று முன்தினம் கொழும்பு சிறுவர் வைத்­தி­ய­சா­லைக்கு குழந்தையின் ஜனாஸா  கொண்டு செல்­லப்­பட்­டது.

 கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அலு­வ­ல­கத்தில் பிரேத பரி­சோ­த­னைகள் இடம்­பெற்ற நிலையில் அதனை பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி சன்ன பெரேரா முன்­னெ­டுத்தார். இதன்­போது குழந்தை மிகக்கொடூ­ர­மாக சித்­திரவதை செய்­யப்­பட்ட பின்னர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சட்ட வைத்­திய அதி­காரி தனது அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

' சட­லத்தில் பல்­வேறு காயங்கள் காணப்­ப­டு­கின்­றன. எனினும் அக்­கா­யங்கள் திடீர் விபத்­தொன்­றினால் ஏற்­பட்­ட­தல்ல. வன்­முறை அல்­லது சித்­தி­ர­வ­தையால் உண்­டான காயங்­களே உள்­ளன. இந்த மர­ண­மா­னது இவ்­வா­றான பல காயங்­களால் ஏற்­பட்­டது.' என சட்ட வைத்­திய அதி­காரி தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்தே சித்­தி­ர­வதை செய்து கொலை செய்த குற்­றச்­சாட்டில் அக்குழந்தையினை வளர்ப்பு தந்­தையும், தாயும் கைது செய்­யப்­பட்­டனர்.

இந்த சம்­பவம் தொடர்பில் பொலிஸார் அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், குறித்த குழந்தை 5 மாத குழந்­தை­யாக இருந்தபோது கடிதம் ஒன்றின் ஊடாக தத்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­த­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் கேச­ரிக்கு தெரி­வித்­த­தா­வது,

' விசா­ர­ணை­களின்படி, கைதான 26 வய­தான குழந்தையை வளர்த்த தாய், ஏற்­க­னவே இரு திரு­ம­ணங்கள் செய்­தவர். இது அவ­ரது மூன்­றா­வது திரு­மணம்.

2 ஆம் திரு­ம­ணத்தில் அவ­ருக்கு 10 வயது பெண் பிள்ளை ஒன்றும்
தற்­போ­தைய விவா­கத்தில் 6 வயது பெண் பிள்­ளை­யொன்றும் உள்­ளனர்.

இந்த ஜோடி, சிறிது காலத்­துக்கு முன் தொட்­ட­லங்க பகு­தியில் வசித்­துள்­ளது. அப்­போது, அவர்­க­ளது அயல் வீட்டில் தமிழ் குடும்பம் ஒன்றும் வசித்­துள்­ளது.


அந்த தமிழ் தம்­ப­திக்கு பிறந்த குழந்­தையே கொல்­லப்­பட்ட குழந்தை. சந்­தேக நப­ரான பெண் வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்தின் படி, குறித்த குழந்தை 5 மாத குழந்­தை­யாக இருந்தபோது, அந்த தமிழ் தம்­பதியர் தாம் வெளி­நாடு செல்லப்போவ­தா­கவும் வரும் வரை குழந்­தையைப் பார்த்­துக்­கொள்ள முடி­யுமா எனவும் இவர்­க­ளிடம் கேட்­டுள்­ளனர்.

பின்னர் முழு­மை­யா­கவே வளர்க்கக் கொடுத்­துள்­ளனர். கடிதம் ஒன்­றினை எழுதி இந்த வளர்ப்புக் கைமாறல் இடம்­பெற்­றுள்­ளது. எந்­த­வொரு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வளர்ப்பு உரிமம் தொடர்­பி­லான நிய­மங்­களும் பின்­பற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. பொறுப்­பேற்ற தம்­ப­தியே பிள்­ளைக்கு மொஹம்மட் அலீ மொஹம்மட் உஸ்மான் ஹிக்கம் என பெயர் வைத்­துள்­ளனர். எந்த பிறப்பு அத்­தாட்சிப் பத்­தி­ரமும் அவர்­க­ளிடம் இல்லை.

 இந்த நிலையில் குழந்தையை தாக்­கு­வ­தற்­கான காரணம் தொடர்பில் நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தோம்.

அதன்போது அந்த வளர்ப்புத்தாய் கூறிய விட­யங்கள் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தின.

தனது சொந்த மகள்மார் இரு­வரை விடவும் தனது கணவர் குழந்தை மீது இரக்கமாக நடந்துகொண்டதாகவும் அதனால்தான் தொடர்ச்சியாக குழந்தையை சித்திரவதை செய்ததாகவும் கைதான பெண்வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இந் நிலை யில் நாம் இது குறித்து தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்கின்றோம் என்றார்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட குழந்தை யின் உண்மை பெற்றோரை பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பிலும் விசாரணை ஒன்று ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித் தனர்.
மாளி­கா­வத்தை குழந்தை உஸ்மான் ஹிக்கம் உயிரிழந்த விவகாரம்.. போலீஸ் விசாரணையில் "தாயார்" கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம். மாளி­கா­வத்தை குழந்தை உஸ்மான் ஹிக்கம் உயிரிழந்த விவகாரம்.. போலீஸ் விசாரணையில் "தாயார்" கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம். Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.