வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்து. #திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி


திருகோணமலை-  ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் பயணித்த லொறியொன்று வேகக்
கட்டுப்பாட்டை இழந்து இன்று (18) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹொரவ்பொத்தானையிலிருந்து  -திருகோணமலை நோக்கிச்சென்ற லொறியே, பன்குளம் வளைவில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறி சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமானதென, மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் எவருக்கும் எத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.
-அப்துல்சலாம் யாசீம் TM-
வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்து. #திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்து. #திருகோணமலை-  ஹொரவ்பொத்தானை பிரதான வீதி Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5