கண்டி வன்முறை விவகாரம்.. திலும் அமுனுகமயின் கையடக்க தொலைபேசியை மேலதிக ஆய்வுகளுக்காக டி..ஐ.டி எடுத்தது.


(எம்.எப்.எம்.பஸீர்)
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அண்மையில் பரவிய வன்முறைகள் தொடர்பில் கண்டி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம நேற்று முன்தினம் பயங்கரவாத புலனாயவுப் பிரிவினரால் சுமார் 12 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது கையடக்கத்தொலைபேசி மேலதிக ஆய்வுகளுக்காக ரி.ஐ.டி. கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - கோட்டையில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் நேற்று முன் தினம் முற்பகல் 10.50 மணிக்கு ஆஜரான திலும் அமுனுகமவிடம் பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் இரவு 11.30 மணி வரை 12 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தெல்தெனிய - திகன, கட்டுகஸ்தோட்டை, பூஜாபிட்டிய, கலகெதர, மெனிக்ஹின்ன, பல்லேகலை, பகுதிகளில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு முதல் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

வன்முறை தொடர்பில் கைதான பொது ஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பிலும் கைது செய்யப்பட தேடப்படும் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பிலும் ரி.ஐ.டி.யினர் விசாரணைகளை முன்னெடுத்ததாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் அவரது கையடக்கத்தொலைபேசியை மேலதிக ஆய்வுக்காக பயங்கரவாத பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் அவசியம் ஏற்படின் மீள விசாரணைக்கு அழைப்பதாக கூறி விடுவித்துள்ளனர். ஏற்கனவே திலும் அமுனுகமவை கடந்த 10 ஆம் திகதி ஆஜராக அழைப்பு விடுக்கப்ப்ட்டிருந்தது. அதன் போது அவர் ஆஜராகவில்லை. இந் நிலையிலேயே நேற்று முன் தினம் அவர் பயங்கரவாத புலனயவுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

கண்டி வன்முறை விவகாரம்.. திலும் அமுனுகமயின் கையடக்க தொலைபேசியை மேலதிக ஆய்வுகளுக்காக டி..ஐ.டி எடுத்தது. கண்டி வன்முறை விவகாரம்..  திலும் அமுனுகமயின் கையடக்க தொலைபேசியை மேலதிக ஆய்வுகளுக்காக  டி..ஐ.டி எடுத்தது. Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5