(படங்கள்) அல் பஸரிய்யா கலை மன்றத்தினால் எற்பாடு செய்யப்பட்ட முன் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு.


அஸ்ஸலாமு அலைக்கும்.
AL-BASHARIYYAH Inter pre school competition -2018அல் பஸரிய்யா கலை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட முன் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு மற்றும் பரிசளிப்பு இன்று சிலாவத்துறை பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சயாகவும் வெற்றிகரமாகவும் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முசலி பிரதேச செயலகத்தின் செயலாளர் கே.எஸ் வசந்தகுமார் அவர்களும் கெளரவ விருந்தினராக மதிப்பிற்குரிய முன் பள்ளி கோட்டமட்டப்பனிப்பாளர் மதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் 22 பாடசாலைகளில் இருந்து 350 முன் பள்ளி மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்கள் பங்கு பற்றினர். பங்கு பற்றிய மாணவர்களுக்கான பெறுமதியான புத்தகப் பை வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த உதவிய தனவான்களுக்கும், முன் பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் எமது AL-BASHARIYYAH Cultural foundation சார்பாக பெருங்கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.


ஊடகம்
Mannar district,
Musali division,
Chilawathurai school ground
(படங்கள்) அல் பஸரிய்யா கலை மன்றத்தினால் எற்பாடு செய்யப்பட்ட முன் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு. (படங்கள்) அல் பஸரிய்யா கலை மன்றத்தினால் எற்பாடு செய்யப்பட்ட முன் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5