அயூப் அஸ்மீன் இன் உருவ பொம்மை எரிப்பிற்கும் எமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.


-பாறுக் ஷிஹான்-
2018.05.04 அன்று முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் (புதுப்பள்ளிவாசல்) முன்பாக இடம்பெற்ற
ஆர்ப்பாட்டத்துக்கும் உருவ பொம்மை எரிப்பிற்கு கட்சி ரீதியான எவ்வித தொடர்பும் இல்லை என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளைதலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான  கே.எம் நிலாம் தெரிவித்தார்.

இந்த உருவ பொம்மை எரிப்பை முழுக்க எமது யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களே செய்தனர் என்பது யாவரும் அறிந்த உண்மை.இந்த விடயத்தை அரசியலாக்க தற்போதைய மாகாண சபை போனஸ் உறுப்பினர் அயூப் அஸ்மீன் மற்றும் அவரது ஊடக செயலாளர் என கூறிக்கொண்டு திரியும் அப்துல்லாஹ் என்பவரும் மக்களை தவறான வழியில் திசை திருப்புகின்றனர்.

நாளுக்கு நாள் புதுப்புது அமைப்புகளை நிறுவி எமது கட்சிக்கும் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனின் பெயருக்கும் அபகீர்த்தியை பரப்புகின்றனர் என்பதை  அனைவருக்கும் அறியத்தருகின்றேன்
அயூப் அஸ்மீன் இன் உருவ பொம்மை எரிப்பிற்கும் எமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அயூப் அஸ்மீன் இன் உருவ பொம்மை எரிப்பிற்கும் எமது  கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5