அரசாங்கத்தை காப்பாற்றும் சம்பந்தன் பதவி விலக வேண்டும்வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, அம்மக்களின் பிரச்சினைகள்
தொடர்பில் அக்கறைகாட்டாத இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து, சம்பந்தன் விலக வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இரா.சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாத்து, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாரெனவும் குற்றஞ்சாட்டிய பீரிஸ், உலக நாடுகளிலுள்ள எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும், தங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தை காப்பாற்றும் சம்பந்தன் பதவி விலக வேண்டும்  அரசாங்கத்தை காப்பாற்றும் சம்பந்தன் பதவி விலக வேண்டும் Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5