குருணாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் முவாத் பாறூக் அஇமகா உடன் இணைவு...
கடந்த பிரதேச சபைத் தேர்தலில் மாவத்தகம பி.சபையில் சு.கட்சியின் அதிகூடிய 1300
வாக்குகளைப் பெற்ற முவாத் பாறூக் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் எமது தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களின் அரசியலில் பால் கவர்ந்து சமுகத்தின் நலன் கருதி அஇமகா உடன் இணைந்தார்.

பறகஹதெனிய அரபா அரங்கில் நடைப்பெற்ற யூத் காங்கிரஸ் நிகழ்வில் உத்தியோகப்பூர்வமாக அஇமகா ல் குருணாகல் மாநகர சபை உருப்பினரும் அஇமகா குருணாகல் மாவட்ட யூத் அமைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் முன்னிலையில் இணைந்துக்கொண்டார்..

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அஇமகா குருணாகல் மாவட்ட முகாமையாளரும் கூட்டுறவு திணைக்கள ஆணையாளருமான SL நசீர், அதிதிகளாக குருணாகல் மாவட்ட ஜமீயதுல் உலமா சபையின் செயலாளர் ஹபீழ் மௌலவி , அஇமகா ரிதீகம பிச அபேட்சகர் அசாட் நசீர், அஇமகா குருணாகல் மத்திய நகர இணைப்பாளரும் பிரபல மனோதத்துவ உலவியளாலருமான மன்சூர் ஹமீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழவில் புதிதாக அஇமகா உடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருணாகல் பிரதேச சபை அபேட்சகர் முன்னால் இராணுவ வீரர் சகூர் வெல்லவ ஐ.தே.க பிரபல உருப்பினர்களான ராஜூ மற்றும் ரிஸ்வி ஆகியோர் இணைந்துக்கொண்டனர்.குருணாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் முவாத் பாறூக் அஇமகா உடன் இணைவு...  குருணாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் முவாத் பாறூக் அஇமகா உடன் இணைவு... Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5