நீதிமன்றம் அல்லது நீதிபதிகளினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் அது தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு பின்வாங்க வேண்டாம்நீதிமன்றம் அல்லது நீதிபதிகளினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின்
அது தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு பின்வாங்க வேண்டாம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள சட்டவாரத்தை இதற்கான ஆரம்பமாக கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உதய ரொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழிலின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் சேவையை பெற்றுக்கொள்வதற்கு தீங்கு ஏற்படும் வகையில் செயற்படும் நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றங்களில் இடம்பெறும் அநீதி தொடர்பாக சட்டவாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெளிவுபடுத்துவதற்காக சில தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவை பின்வருமாறு – 0777235363 / 0113133864 /  0113133872 
நீதிமன்றம் அல்லது நீதிபதிகளினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் அது தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு பின்வாங்க வேண்டாம்  நீதிமன்றம் அல்லது நீதிபதிகளினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் அது தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு பின்வாங்க வேண்டாம் Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5