ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் ..சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியாவிற்குள் உள்ள ஈரானிய இராணுவதளங்களை அழித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய படையினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சிரியாவிலிருந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஈரான் 20 எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இவற்றில் பலவற்றை நடுவானில் அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் உள்ள ஈரானிய  தளங்கள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.இதற்காக 70
க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னரே இஸ்ரேல் விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

சிரியாவில் இரவு முழுவதும் விமான எதிர்ப்பு பொறிமுறைகள பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக சுயாதீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் ..  ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் .. Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5