லெபனான் தேர்தல் ; ஈரான் பின்னணியுடனான ஹிஸ்புல்லாஹ் ஷியா கூட்டணி வெற்றி..லெபனான் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற  தேர்தலில் ஈரானின் பின்னணியுடனான  
ஹிஸ்புல்லாஹ் ஷியா   கூட்டணி வெற்றிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக லெபனானில் 2009 ம் வருடமே தேர்தல் நடைபெற்றது அதன்  பின்னர் நீண்ட காலத்திற்கு பின்னர்  நடைபெற்ற தேர்தலில் சவுது அரேபியாவின் பின்னனியில் இயங்கும் லெபனான் பிரதமர்    Saad al-Hariri   சுன்னி முஸ்லிம் கூட்டணி இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

128 மொத்த ஆசனங்களில் ஹிஸ்புல்லாஹ் கூட்டணி 67 ஆசணங்களை பெற்றுதாக தகவல் வெளியாகியுள்ளா நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் லெபனான் பிரதமர்  Saad al-Hariri  கட்சி தோல்வியடைந்துள்ளமை மத்திய கிழக்கில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் தேர்தல் ; ஈரான் பின்னணியுடனான ஹிஸ்புல்லாஹ் ஷியா கூட்டணி வெற்றி..  லெபனான் தேர்தல் ; ஈரான் பின்னணியுடனான ஹிஸ்புல்லாஹ் ஷியா  கூட்டணி வெற்றி.. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5