கண்டிக் கலவர பிரஜைகள் ஆணைக்குழுவை உதாசீனம் செய்த முஸ்லிம்கள்




ஜே.எம். ஹாபீஸ்-
கண்டி பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த ஒரு செயலமர்வு கண்டி தலதா வீதியிலுள்ள டெவோன்
ஹோட்டலில் (13.5.2018) ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றது.

இலங்கையின் தலைசிறந்த புத்திஜீவிகள் எனக் கூறப்படும் பௌத்த அறிஞர்கள் 70 அல்லது 80 பேர் அளவிலும், முஸ்லிம்கள் சுமார் 5 பேர் அளவிலும் தமிழர்கள் 10 பேர் அளவிலும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

அங்கு ஜூரிசபை ஒன்றும் ஏற்படுத்ப்பட்டு சில பிரேரணைகள் எழுத்து மூலம் பெறப்பட்டன. இக்குழு 'இலங்கை வன்முறைகள் ஒழிக்கும் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கான பிரஜைகளின் ஆணைக்குழு' என பெரிடப்பட்டிருந்தது.

இங்கு அதிகளவில் சட்டத்தரணிகள் காணப்பட்டதுடன் பேராசிரியர்கள் கலாநிதிகள் பலரையும் காணமுடிந்தது. பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் பலரும் வந்திருந்துடன் கருத்துக்ளையும் வெளியிட்டனர். 

இங்கு சமூகமளித்தவர்கள் அனைவரும் ஊடகங்களில் வந்த அழைப்புக்கமைய சமூகமளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இது ஒரு நல்ல முயற்சி. இங்கு 99 சதவீதம் கண்டி பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் - சிங்கள உறவு பற்றியே பேசப்பட்டது.

குறிப்பாக கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமா சபை சார்பாக மௌலவி பஸ்லுல் றங்மான், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் பீடாதிபதியுமான குலசூரிய, கலாநிதி ஜெகான் பெரேரா, முன்னாள் நீதியரசரும் மத்திய மாகாண சபை அங்கத்தவருமான பீ.பி.வராவௌ, பேராசிரியர் அமரகீர்த்தி லியனகே, இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தைச் சேர்ந்த சிவஞானம், பேராசிரியரும் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழகப் பதிவாளருமான கலாநிதி எம்.பி. அதிகாரம், முன்னாள் கண்டி மாவட்ட அரச அதிபர் ஏ.எம், எல்.பி. பொல்கொல்ல, பெரிஸ்டர் சீ.வர்ணசூரிய, சட்டத்தரணி சீ.எம்.ஹாத்திம் உற்பட பௌத்த, கத்தோலிக்க மதகுருக்கள் சிவில் சமுகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் பலரும் இங்கு கருத்துக்களைத் தெரிவித்ததுடன் பிரேரணைகளை எழுத்து மூலம் முன்வைத்தனர்.

சிங்கள முஸ்லிம் உறவு பற்றி வித்தியார்த்த கல்லூரி 13 வயது மாணவன் (7ம் வகுப்பு) கவின் பண்டார கூட கருத்துத் தெரிவித்த நிலையில் நடப்பது முஸ்லிம்கள் சம்பந்தப்படாத ஒரு பிரச்சினையா என்று அங்கலாய்க்கும் அளவு முஸ்லிம்களது பங்களிப்பு காணப்பட்டது.

சிங்கள் பௌத்த மத குருக்கள் பலர் கலந்துகொண்ட போதும் முஸ்லிம் மதகுரு என அடையாளப் படுத்தும் வகையில் ஒரே ஒரு மௌலவி மட்டுமே சமூகமளித்திருந்தார். 

அப்படியாயின் கண்டியில் வேறு மௌலவி மார்கள் இல்லையா? என்ற வினா எழுகிறது. ஏன் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லையா? என்று ஒருசிலர் தனிப்பட்ட முறையில் கேட்கும் அளவு எம்மவர் பங்களிப்பு காணப்பட்டது. பல்வேறு வேலைப் பழுவுக்கு மத்தியில் ஒரு சொற்ப நேரம் மட்டுமே மௌவி பஸ்லுல் வீற்றிருந்து அக்குறையைப் போக்கினார்.

கண்டியில் தலை நிமிர்ந்து நிற்கும் முஸ்லிம் சட்டத்தரணிகள் பலபேர் உள்ளனர். ஆனால் சட்டத்தரணி ஹாத்தீம் மட்டும் இறுதி நேரத்தில் வந்து அக்குறையைப் போக்கினார். அவரும் இறுதி நேரத்திலாவது  வர வில்லை என்றால் சட்டத்தரணிகள் இல்லாத ஒரு கண்டி முஸ்லிம் சமுகமா? என்ற நிலை ஏற்பட்டிருக்கும். 

அங்கு ஒரு சில நண்பர்கள் சொன்ன கதைதான் வித்தியார்த்த கல்லூரியைச் சேர்ந்த 13 வயது சிங்கள மாணவனுக்குள்ள அக்கறை கூட கண்டியிலுள்ள எமது தலைவர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் புத்திஜீவிகளு;கும் இல்லையே என்பதாகும்.

முழுக்க ழுமுக்க முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசிய இடத்தில் பேரளவில் ஐந்து முஸ்லிம்கள் பார்வையாளராக கலந்து கொள்வ தென்பது ஏற்றுக்கொள்ள முடியுமா? (அதில் ஓரிரு முஸ்லிம் அன்பர்கள் மட்டும் எழுத்து மூலம் பிரேரனையை முன்வைத்தனர்.)

அங்கு முஸ்லிம்களின் பங்களிப்பை விட பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த தமிழ் சகோதர சகோதரிகளது பங்களிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அவர்கள் அதிகமாக அவர்களது தனிப்பட்ட பெருந்தோட்டம் சார்ந்த பிரச்சினைகளையே மையப்படுத்தி இருந்தனர்.

முஸ்லிம்களது பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்து ஆலோசனை பெற அமைக்கப்பட்ட ஒரு சிவில் ஆணைக்குகுழு பற்றி அதிக முஸ்லிம்கள் கவனத்திற் கொள்ளவில்லை என்பது எமது சமூகம் போகும் இடம் எது என்பதை உணாத்துகிறது.

இமது பங்களிப்பை முறையாக வழங்காது பின்னர் ஏதேனும் யோசனைகள் முன்வைக்கப்படும் போது அதில் குறைகாண்பதில் பயன் இல்லை. 

உள்ளுராட்சி எல்லை பிரிப்பிலும் இவ்வாறே எமது பங்களிப்பை செய்யாது இருந்து விட்டு அமுல் படுத்த்ப்பட்ட பிறகு குறை கூறியர்களே அதிகம். தற்போது இனப் பிரச்சினை தெடர்பாக எமது பிரச்சினைகளை சரியாக முன்வைக்காத பட்சத்தில் ஏதும் முடிகள் எட்டப்பட்ட பிறகு கவலைப் படுவதில் பலன் இல்லை.

உதாரணமாக இன ரீதியாக இயங்கும் பாடசாலைகள் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டது. அப்படிச் செய்தால் உள்ளதும் இல்லாது போகும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. 

எனவே முஸ்லிம் பாடசாலைகளில் சிங்களப் பிரிவுகள் உள்ளது போல் சிங்களப் பாடசாலைகளிலும் தமிழ் பிரிவுகள் அமைக்கப்பட்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும் என்ற ஒரு யோசனையை முன்வைக்க சபையில் ஒருவரும் இருக்கவில்லை. 

எனவே பின்பு வரும் காலங்களில் முஸ்லிம் அல்லது தமிழ் பாடசாலை என்ற அடையாளம் அகற்றப்பட்டு அங்கு நாம் இரண்டாம் பிரஜையாக்கப்பட்ட பிறகு குறல் கொடுப்பது பொருந்துமா? என சிலர் இது தொடர்பாக கதைப்பதும் எமது காதுக்கு எட்டியது.

எனவே பிரச்சினை வந்த பிறகாவது அடிபட்ட பிறகாவது நாம் விழிக்கவில்லை என்றால் எந்தக் காலத்தில் விழிக்கப் போகிறோம். பிறரை குறை கூறுவதை விட நாம் எம்மை முதலில் திருத்திக் கொள்ள குறைந்த பட்சம் முயற்சியாவது செய்யக் கூடாதா?
கண்டிக் கலவர பிரஜைகள் ஆணைக்குழுவை உதாசீனம் செய்த முஸ்லிம்கள்  கண்டிக் கலவர பிரஜைகள் ஆணைக்குழுவை உதாசீனம் செய்த  முஸ்லிம்கள் Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.