கோத்தாபாய ஆட்சிக்கு வந்தால், ஊடக யுத்தத்தில் அவர் இலேசாக வீழ்த்தப்படுவார்....!




ஒரு வளர்ந்துவரும் ஜனநாயக நாட்டில் அரைவாசி ஜனநாயகமும் அரைவாசி அடக்குமுறையும்
இருந்தால்தான்  அந்த நாட்டை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரலாம், இதுதான் உலகவரலாறாகவும் இருந்துவருகிறது. 

சிங்கப்பூர், சீனா,  மலேசியா, இந்தோனிசியா போன்ற நாடுகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவந்தவர்கள் இந்த வழிமுறையையே பின்பற்றினார்கள் என்பதும் வரலாறாகும்.   அந்த வகையில் இலங்கையில் கோதாபாய ராஜபக்ஸ அவர்கள் நாட்டை வழிநடத்தும் ஜனாதிபதி பதவியை அடைந்து கொள்வாரேயானால்,  அது நாட்டின் எதிர்கால நலனுக்கு உகந்ததாக அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.  புரையோடிப்போயிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் அவருடைய  கடும்போக்கும், கொள்கையில் விடாப்பிடியான தன்மையும்தான் அதற்கு காரணமாகும் என்பதையும்  எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். 

அதேநேரம் அவருடைய இருக்கமான தோற்றமும், ராணுவ பின்புலமும், தமிழ் மக்களுடைய இவர்மீதான நம்பகத்தன்மையும், மேற்குலகின் சதியும் இவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு பெரும்சவாலாகவே  அமையலாம்.

இந்த நிலையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவருக்கு எதிராக நிறைய பொய்ப்பிரச்சாரங்களை அவருடை அரசியல் எதிரிகள் கட்டவிழ்த்துவிடுவார்கள். அதிலே அவர் இலேசாக வீழ்த்தப்படுவார் என்பதே உண்மையாகும்.  தமிழர்களும், அதனோடு சேர்ந்த தமிழ் டயஸ்போராக்களும், அவர்களைத்  தாலாட்டி வளர்க்கும் மேற்குலகங்களின் கைகளில்தான் இன்று ஊடகபலம் உள்ளது. அவர்கள் நினைத்தால் நாயைக்கூட ஆடு என்று கூறினார்கலென்று சொன்னால்,  அதனையும்  உலகத்தில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் கண்ணை மூடிக்கொண்டு ஒளிபரபும் என்பதை நாம் பல விடயங்களில் கண்டும் கேட்டும் வருகின்றோம். 

உலகத்திலே அவர்களுடைய ஊடக யுத்தத்துக்கு பழியானவர்கள் ஏராளம் எனலாம். அந்தவகையில் இராணுவ பாசரையில் பயிற்சி பெற்றவரும்,நீண்டகால கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியவருமான கோதபாய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ அதேபோன்று பஷீல் ராஜபக்ச போன்றவர்கள் சந்தித்த மறைமுகமானதும், வெளிப்படையானதுமான ஊடக எதிர்ப்புகளைவிட, மிகவேகமான எதிர்ப்புகளை இவர்  சந்திப்பதோடு, ஐ.நா.சபையின் இலங்கைக்கு எதிரான தற்போதய நடவடிக்கையும்  கடுமையாக இருக்கும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லையெனலாம்.

மஹிந்த அரசாங்கத்தில் கோதாபாய அவர்கள்  நேரடி அரசியலில் இல்லாது விட்டாலும், பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவருடைய பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அதில் எந்தளவு உண்மையுள்ளது என்பதற்கு அப்பால் அவருக்கு எதிரான ஊடக யுத்தமே மேலோங்கியிருந்தது எனலாம். கோதாபாயா ராஜபக்ஷ அவர்களை பெரும்பாண்மை இன மக்கள் ஆதரித்தாலும், குறிப்பாக தமிழ் மக்கள் உளப்பூர்வமாக ஆதரிக்கமாட்டார்கள். மாறாக தங்களது  போராட்டங்களை இருமடங்காக ஆக்கிகொள்வார்கள். முஸ்லிம் மக்களைப்பொறுத்தவரையில் கோதாபாயாவுக்கு எதிரான ஊடக யுத்தத்தில் அவர்களும் அள்ளுண்டுபோவார்கள் என்பதே உண்மையாகும்.  எது உண்மை எது பொய்,  இது எதனால் சொல்லப்படுகிறது என்றறெல்லாம் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள், ஊடகங்கள் எதைச் சொல்லுகிறதோ அதனை அப்படியே நம்பிவிடுவார்கள். அதற்கு உதாரணம்தான் அளுத்கம பிரச்சினையாகும். அளுத்கமை பிரச்சினையை ஒன்றுக்கு பத்துதரம் தூக்கிப்பிடித்த தமிழ் ஊடகங்கள் இன்று கிந்தோட்டை, அம்பாரை, திகன போன்ற பகுதிகளில் நடந்த  பிரச்சினைகளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை, காரணம் இந்த நல்லாட்சி அரசாங்கம் அவர்களுக்கு தேவையான ஆட்சியாக இருப்பதனாலாகும். அதனால் முஸ்லிம் சமூகமும் அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லையெனலாம்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..
கோத்தாபாய ஆட்சிக்கு வந்தால், ஊடக யுத்தத்தில் அவர் இலேசாக வீழ்த்தப்படுவார்....!  கோத்தாபாய ஆட்சிக்கு வந்தால், ஊடக யுத்தத்தில் அவர் இலேசாக வீழ்த்தப்படுவார்....! Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.