எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். 

எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசு தெரிவித்திருந்த போதும் அது பயனற்ற ஒரு விடயம் எனவும் இவ்வாறு ஒரே முறையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்ற காரணத்தால் சிலாபம் நகரின் பல பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் சிலாபம் மீன் விற்பனை நிலையமும் மூடப்பட்டுள்ளதாகவும், படகுகள் கடலுக்கு செல்லாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்  எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5