பெரும்பாலான டீசல் வாகணங்களுக்கு மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலேயே மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்படுகின்றது



மண்ணெண்ணை உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபட்டுள்ளன.
மண்ணெண்ணை 1 லீற்றர் 57 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் சமுர்த்தி பயனாளிகள் கடற்றொழிலாளிகள் மற்றும் பெருந்தோட்டதொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இவர்களுக்கு முன்னைய விலையிலேயே அதாவது மண்ணெண்ணை லீற்றர் 44 ரூபாவிற்கு வழங்கப்படும் என்று ஊடகம் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார் .

அமைச்சில் நேற்று நடைபெற்ற இந்த விலை அதிகரிப்பு தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

சமுர்த்தி பயனாளிகள் அதாவது குப்பிவிளக்கு (மேசைவிளக்கு) மற்றும் மண்ணெண்ணை கொண்டு சமையல் முதலானவற்றை மேற்கொள்ளும் வறிய சமுர்த்தி பயனாளிகள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் மண்ணெண்ணை வழங்கப்படும். அதேபோன்று கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் மண்ணெண்ணை வழங்கப்படும். சமுர்த்தி பயனாளிகள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு இந்த நிவாரண விலையில் மண்ணெண்ணை வழங்குவதற்கு கிராம உத்தியோகத்தர் மூலம் நிவாரண அட்டை வழங்கப்பட்டு மண்ணெண்ணை விநியோகம் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

கடற்றொழிலாளர்களுக்கு இந்த நிவாரணம் அவர்களது வங்கிகணக்கில் வைப்பு செய்யப்படும். இது எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்று நள்ளிரவுமுதல் (92 ) பெற்றோல் 137 ரூபா , (95) பெற்றோல் 148 ரூபா, ஓட்டோ டீசல் 109 ரூபா , சுப்பர் டீசல் 119 ரூபா ,மண்ணெண்ணை 101 ரூபா அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்த்கது. 
பெரும்பாலான டீசல் வாகணங்களுக்கு மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலேயே மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்படுகின்றது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பெரும்பாலான டீசல் வாகணங்களுக்கு மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலேயே மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்படுகின்றது  பெரும்பாலான டீசல் வாகணங்களுக்கு மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலேயே மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்படுகின்றது Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.