நாளை நள்ளிரவு முதல் தனியார் பஸ் ஸ்ரைக் ..நாடாளவிய ரீதியில் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக
அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தாம் கோரிக்கை விடுத்த பஸ் கட்டண சீர்திருத்த்திற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்காது, பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 6.56 வீதமாக அதிகரிக்கவும் ஆரம்ப கஸ் கட்டணத்தில் எவ்விமாற்றமும் செய்யாதமையால் தாம் இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து பஸ் கட்டணத்தை 15 முதல் 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும் அவ்வாறு அரசாங்கம் பஸ்கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுடுவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
நாளை நள்ளிரவு முதல் தனியார் பஸ் ஸ்ரைக் .. நாளை நள்ளிரவு முதல் தனியார் பஸ் ஸ்ரைக் .. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5