அக்குறனை மார்கட் விவகாரம் ; அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஐ. எம். இஸ்திஹார் இமானுதீனின் விளக்கம் இதோ ..



அக்குறணை நகரில் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான
நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்ற போதிலும்  ஆளும் அக்குறணை பிரதேச சபையினர் அதன் கட்டிடப் நிர்மாணப் பணிகளுக்கான வேலைத்திட்டங்களை  மந்தகதியில் மேற்கொள்வதால்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீண்டும்  கை நழுவி திரைசேரிக்குச் சென்று விடும் என்ற சந்தேகம் எழுவதாக அக்குறணை பிரதேச சபையின் எதிர் கட்சி உறுப்பினர் ஒருவரால் சமூக வலைத்தளங்களில்  பதிவு செய்துள்ள குற்றச் சாட்டானது உண்மைக்கு புறம்பானதொரு குற்றச்சாட்டாகும்.  

இதற்கான முழுமையான முயற்சி முன்னெடுப்புக்களை நாங்களே மேற் கொண்டு செல்கின்றோம் என்பது குற்றம் சாட்டுவோர் அறியாததொரு விசயமல்ல என்று அக்குறணை பிரதேச சபை தவிசாளர் . எம். இஸ்திஹார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

உண்மையிலேயே கடந்த 15 -05-2018 சபை அமர்வின் போது அக்குறணை நகரில் அமையப்பெறவுள்ள நவீன பொதுச் சந்தை விவகாரம் தொடர்பாக 29 பிரதேச சபை உறுப்பினர்களும் அவரவர் தங்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிவித்தனர்

அதன்போது இது ஒழுங்கு முறைப்படி செய்ய வேண்டும். ஊரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறந்த முறையில் செய்யப்பட வேண்டும் என்று ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களும் தத்தம் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள்.

இதன் போது இந்த கட்டிட நிர்மாணிப் பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும்  நிறுவனத்துடன் சகல பிரதேச சபை உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு தினத்தில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வேண்டி அனுமதியைப் பெற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது

அந்த வகையில் நான் அனுமதி கோரி கடிதம் அனுப்பியதற்கு இணங்க  நகர அபிவிருத்தி அதிகார சபையினர் அது தொடர்பாக சட்ட திட்டங்களையும் விளக்கங்களையும் பற்றி பேசுவதற்கு எதிர் வரும் 31-05-2018 திகதி அனுமதி வழங்கியிருக்கின்றார்கள்.

597 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த நவீன வசதிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியாகும். இது எமது அக்குறணை நகருக்கு கிடைத்தமை என்பது வரவேற்கத்தக்கவே. ஐந்து மாடிக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதியாகும். வாகன தரிப்பிடம், சிறுவர் பூங்கா, நூலகம், கடைத் தொகுதி, கேட்போர் கூடம் காரியாலயம் , உள்ளக விளையாட்டு அரங்கு உள்ளடங்கிய கட்டிடத் தொகுதியே இது


2011 ஆம்  ஆண்டளவில் பி எம். ஜே. டி அமைப்பினர் இப்படியான கட்டிடத் தொகுதி அக்குறணை நகரில் அமைய வேண்டும் என்று கௌரவ அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களிடம் கோரிக்கையொன்றை முன் கூட்டியே முன் வைத்திதிருக்கின்றார்கள். அது தற்போது கை கூடியுள்ளது. இதனைத் திறன்பட பற்றுறுதியுடன்  செய்ய வேண்டும் என்பதே எமது அவாவும் எதிர்பார்ப்புமாகும்

கட்டிட வரைபடம் தொடர்பாக மீளாய்வும் பற்றியும் கட்டிடத்திற்குள் வாகனத் தரிப்பிடத்திற்குச் செல்லும் பாதை பற்றிய விளக்கம்நகரிலுள்ள வாகன நெருசல்களுக்கு நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத்தில் சுமார் 15 அளவிலான வாகனங்களே நிறுத்த முடியும். இது போதியளவு போதாது. அதேவேளை கீழ் மாடியிலேயேதான் மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ளது கட்டுப்பாடின்றி பாதைசாரிகள் மலசலம் கழிப்பதற்காக வருகை தருவார்கள்

அதற்கு மாற்றீடாக மேல் மாடியில் அவற்றை அமைக்க வேண்டும். கழிவு நீர் வெளியேற்றத்திற்கான வசதிகள் கோடிட்டுக் காட்டப்பட வில்லை. ஒரு ஒழுங்கமைப்பிலான  கட்டிட வடிவத்திலான பொறிமுறையுடன் அமைக்கப்படுதல் அவசியம்.  

எது எவ்வாறாக இருந்த போதிலும்  எதையும் சேய் நேர்த்தியுடனும் வெளிப்படையாகவும் செய்ய வேண்டும். மறைமுகமாகவோ வெளிப்படையாகோ இதற்கு யாரும்  ஆளும் தரப்பில் இருந்து எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  

எதிர் கட்சியினர் விமர்சனத்தில் அநேகமானவை அரசியல் காய் நகர்த்தலுக்கான  மையக் கூற்றாகவே அமைந்தன. எந்த வகையிலும் நாங்கள் அக்குறணை  நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள பொதுச் சந்தை நிர்மாணப் பணிகளுக்கு பெரும் பங்களியாகவே இருப்போமே தவிர அதற்கு இடையூறாக ஒரு போதும் இருக்கப் போவதில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அக்குறணை மக்கள் ஒரு சிறு துளி கடுகளவும்  சந்தேகப்படத் தேவையில்லை. இந்த வேலைத் திட்டத்தை எல்லாத் தரப்புக்களையும் அரவணைத்து மத்திய மாகாண முதல் அமைச்சர் முதல் யாருடன் இதற்கான சட்ட அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டுமோ அந்த நபர்களுடன் துரித கதியில் பெற்றுக் கொடுத்து கட்டிடப் பணியை ஆரம்பிக்க வேண்டிய பாரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது

குறைந்தளவு 2 அல்லது 3 மாதங்கள் எடுக்கலாம். எனவே  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி திரும்பிச் செல்லாது நவீன பொதுச் சந்தை கட்டிட நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அக்குறனை மார்கட் விவகாரம் ; அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஐ. எம். இஸ்திஹார் இமானுதீனின் விளக்கம் இதோ ..  அக்குறனை மார்கட் விவகாரம் ; அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஐ. எம். இஸ்திஹார் இமானுதீனின் விளக்கம் இதோ .. Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.