ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்..
விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலத்தின் கீழ் ஆகக்கூடியது மூன்று விசேட நீதிமன்றங்களை அமைக்க முடியும. 
இருப்பினும் முதற்கட்டமாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றம் நடைமுறைக்கு வரும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

விசேட நீதிமன்றம் மூலம் சமகால நல்லாட்சி அரசாங்கம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. குற்றம் செய்தவர்களுக்கு மாத்திரமே இதில் தண்டணை வழங்கப்படுமே தவிர இதன்மூலம் எவரையும் பழிவாங்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.
விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலம் இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பிரதம நீதியரசர் விரும்பினால் நாளை மறுதினம் முதலே விசேட நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்த முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார் தெரிவித்தார்.

விசேட நீதிமன்றத்தில் நாள் தோறும் வழக்குகளை விசாரித்து ஆகக்குறைந்தது ஒரு மாதத்தில் ஒரு வழக்குக்கான தீர்ப்பை வழங்க முடியுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நீதிபதிகள் நினைத்தவாறு வழக்குகளை ஒத்திவைக்க முடியாது. நாள்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படும் ஏற்கனவே விசாரணையிலுள்ள வழக்கு அல்லது இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத வழக்கு என எந்தவொரு வழக்கும் விசேட நீதிமன்றத்திற்கூடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். 

அது இலஞ்ச ஊழல் வழக்காகவோ அல்லது குற்றறவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகவோ இருக்கலாம் நீதிமன்ற திருத்தச் சட்டமூலத்தில் முன்வைக்கப்பட்ட 12 ஏ (1), (2), (7) ஆகிய சரத்துக்கள் அரசியலமைப்பின் 13ஆவது சரத்துடன் முரண்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தலதா அத்துக்கோரள மேலும் கூறினார்.

செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் டொக்டர். ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்..  ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.. Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5