சாய்ந்தமருது வைத்தியசாலை மீதான மக்கள் எழுச்சிக்கு யார் காரணம் ?



எம்.ஐ.சர்ஜுன் - சாய்ந்தமருது-
சாய்ந்தமருது வைத்தியசாலை தொடர்பில் சிலரது திருகுதாளங்களையும்
மறைமுக சதியையும் அரங்கேற்றியவர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை அழிக்க நினைக்கும் சக்திகள் குறித்தும் சாய்ந்தமருது வைத்தியசாலையில் எழுந்துள்ள மக்கள் எழுச்சியின் பின்னணி குறித்தும்; விளக்க வேண்டியிருப்பதால் இது நீண்ட பதிவாக இடம்பெறுகிறது. கருத்தூன்றிப் புரிதல் தேவைப்படும் விடயம் இது என்பதினால் நீண்ட பதிவை பொருட்படுத்தாது வாசிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

கடந்த 2018.05.12ம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வளாகத்திற்குச் சென்ற பொதுமக்கள் வைத்தியசாலை அபிவிருத்தி சபையை உடனடியாக புனரமைக்குமாறு பிரதேச வைத்திய அதிகாரியை கேட்டுக்கொண்ட விடயம் தற்போது சாய்ந்தமருதிலும் சமூக வலைத்தளங்களிலும் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. குறித்த மக்கள் எழுச்சி நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகளான சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர்கள்இ புத்திஜீவிகள்இ ஆர்வமுடையவர்கள் சிலருமாக  வைத்தியசாலையினுள் அத்துமீறி பிரவேசித்து கடமைக்கு பங்கம் விளைவித்ததாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக மந்த கதியில் இயங்கியும்இ சில காலங்களில் இயங்காத நிலையிலும் இருந்து வருவதாக பேசப்படும் நமது சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையைப் புனரமைக்க உடினடியாக நடவடிக்கை எடுக்குமாறு அன்றைய தினம் பிரதேச வைத்திய அதிகாரியை மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க குறித்த வைத்திய அதிகாரியும் 'தான் இது தொடர்பில் உரிய முன்னெடுப்புகளைச் செய்வதாக' பொதுமக்கள் மத்தியில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிகழ்வை சமூக ஊடகம் ஒன்று நேரடியாக ஒளிபரப்புச் செய்திருந்த நிலையில் குறித்த ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே வைத்திய அதிகாரி மேற்படி கருத்தையும் வெளியிட்டிருந்தார்.

ஒரு வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபையை மக்கள் கிளந்தெழுந்து புனரமைப்புச் செய்யக் கோரும் நிலைக்கு ஏன் போனது என்பது குறித்து நோக்க வேண்டியுள்ளது.

சாய்ந்தமருது வைத்தியாசாலை 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பிராந்தியத்திலே முன்னோடி வைத்தியசாலையாக இயங்கிவந்து 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் முற்றாக சேதமடைந்து பின்னர் சாய்ந்தமருது பொதுநூலகத்தில் தற்காலிகமாக இயங்கியது. 

தற்காலிகமாக இயங்கிய காலப்பகுதியில் இதை  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்க ஒரு தரப்பு முயற்சி செய்ததை அன்று சாய்ந்தமருது இளைஞர்களும் பொதுமக்களும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து இணைப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

மேற்படி இணைப்பு முயற்சிக்கு அப்போதைய காலப்பகுதியில் கடமையாற்றிய சில அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் முயற்சி செய்தனர். இதற்கான முக்கிய காரணம் சாய்ந்தமருதுக்கென்று தனியான வைத்தியசாலை இயங்கக்கூடாது என்ற வக்கிர எண்ணங்களாகும். 

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தை நிறுவதில் முக்கிய செல்வாக்குச் செலுத்தும் பௌதீக வளமாகிய வைத்தியசாலையை இல்லாமல் செய்வதனூடாக சாய்ந்தமருதுக்கு வைத்தியசாலையும்இ தனியான உள்ளுராட்சி மன்றத்தையும் இல்லாமல் செய்யும் உள்நோக்கமே சாய்ந்தமருதுக்கு எதிரான கொள்கையுடைய அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் எண்ணமாக இருந்தாக இன்றும் சாய்ந்தமருது மக்களால் உணரப்பட்டு பேசப்படும் விடயமாகும்.

அன்று அவர்களது நோக்கம் நிறைவேறாது போனதால் அண்மைய காலப்பகுதியில் கூட சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதுவும் பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

தற்காலிகமாக இயங்கிய வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்ற வேண்டுமென பொதுமக்களும் ஊர் நிருவாகிகளும் கோரிக்கை முன்வைத்தபோது அதற்கான பொருத்தமான பல்வேறு இடங்கள் முன்மொழியப்பட்டு இறுதியில் சாய்ந்தமருது தாமரை மைதானத்தில் அமைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. 

சுனாமிவரை சாய்ந்தமருதின் பொது விளையாட்டு மைதானமாக இருந்த இந்த மைதானத்தின் ஒரு தாழ்நிலப் பக்கத்தில் சுனாமி அனர்த்த கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டு வந்தமையைக் காரணம் காட்டி 'இது ஒரு சதுப்பு நிலம் என்றும் இது குப்பை கொட்டப்படும் ஒரு பகுதி (னுரஅpiபெ ளுவைந) என சிலர் சுகாதரார அமைச்சுக்கு சிலர் அறிவித்து வைத்தியசாலை அமைப்பதற்கான மண் பரிசோதனை அறிக்கையை (ளுழடை வுநளவ சுநிழசவ) திரிவுபடுத்தி வைத்தியசாலை அமைப்பதற்கான சாதகமற்ற நிலமாக இது உள்ளது உள்ளது என நிரூபிப்பததில் மறைமுக சதிகள் நடந்தேறியமை நமது அவதானங்களுக்குப் புறம்பானதல்ல.

அதனால் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கான நிரந்தரக் கட்டிடம் அமைவதில் பின்னடைவு ஏற்பட்டு வைத்தியசாலையை அமைக்க முன்வந்த நிறுவனங்கள் கையை விரித்தன. சாய்ந்தமருதுக்கு ஒரு நிரந்தர வைத்தியசாலை அமைவதை அப்போதிருந்த முஸ்லிம் கட்சித் தலைமைகள் மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நோக்கின. 

சாய்ந்தமருது மக்கள் அவர்களை பாராளுமன்றம் அனுப்ப புள்ளடி போடும் இயந்திரங்களாக அவர்கள் பார்த்தனரே தவிர உணர்வுள்ள ஜீவன்களாக கருதி இந்த மக்களின் வைத்தியத் தேவையைப் பூர்த்திசெய்ய ஒரு வைத்தியசாலை அமைக்க முனைப்புக் காட்டவில்லை      
இந்நிலையில்இ தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மிகத் துணிச்சலுடன் முன்வந்து நிதி ஒதுக்கீடுசெய்து சாய்ந்தமருது வைத்தியசாலைக்கான வெளி நோயாளர் பிரிவு கட்டிடத்தை இந்த மைதானத்திலேயே அமைத்தார். 

இந்த கட்டிடமே தற்போது முன் புறமாக காட்சியளிக்கும் கட்டிடமாகும். வெளிநோயாளர் பிரிவு இயங்க ஆரம்பித்தன் பின்னர் வைத்தியசாலைக்கான வாட்டுகளை அமைக்கும் தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்திற் கொண்ட சாய்ந்தமருது பிரமுகர்கள் பல்வேறு தரப்புகளிடமும் முயற்சிசெய்து இறுதியில் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் முழுமையான வைத்தியசாலையை அமைக்கும் பணியைப் பொறுப்பேற்று கட்டி முடித்தது. 

இந்நிகழ்வின் பின்புலத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீனின் பங்களிப்பு பின்புலமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வைத்தியசாலை அமைக்கும் காலப்பகுதியில் இந்தப் பதிவை எழுதும் நான் உட்பட இன்று வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கப் புனரமைப்புக்கு முன்னின்று பாடுபடும் பலர் அந்த அபிவிருத்திச் சபையில் உறுப்பினர்களாக இருந்தோம். பிந்திய காலப்பகுதியில் இந்த அபிவிருத்திச் சங்கத்திற்குள் ஊடுருவிய சில அரசியல்வாதிகளின் ஏஜென்டுகளின் ஒரு பக்கச் சார்பான செயற்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாமையே இந்த வைத்தியசாலை அமைவதில் முக்கிய பங்காற்றிய பலர் வெளியேறக் காரணமாக அமைந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை இனி ஆராயலாம். இந்த வைத்தியசாலை அபிவிருத்திச் சபை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரு சீரான இயக்கமற்ற நிலையில் இருந்து வருகின்றதை அவதானித்த பலர் வைத்தியசாலையின் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் போதிய பங்களிப்பை வழங்கத் தவறியுள்ளது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பரவலான குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டே வந்தது. இதனை பல்வேறு தடவைகள் சாய்ந்தமருது நலன்விரும்பிகள் பலர் சுட்டிக்காட்டியும் அவற்றை நிவர்த்தி செய்யாது வெறுமமேன பெயரளவில் இயங்கும் சபையாகவே அது காட்சியளித்தது. அபிவிருத்திச் சபையின் இயலாமையை மறைப்பதற்காவே சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்கும் முயற்சியையும் மேற்கொண்டு இறுதியில் பொதுமக்களின் எதிப்பினால் அந்த நடவடிக்கையை கைவிட்டனர்.

அபிவிருத்திச் சபைக்குரிய வங்கிக் கணக்கை முறையாக பேணாததால் அந்த வக்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்ததை பிரதேச வைத்திய அதிகாரியே தெரிவித்திருந்தார் அதனை செயலாளாரும் ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தார். ஒரு பொது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பேணுவதில் இவர்கள் அக்கறை காட்டவில்லை என்பதே இவர்களது வினைத்திறனற்ற செயற்பாட்டை ஒப்புவிக்கின்றது. 


இந்த ஒரு ஆதாரமே வைத்தியசாலை அபிவிருத்திச் சபை இயங்கவில்லை என்பதை நிரூபிக்கப் போதுமானது. ஏனெனில்இ ஒவ்வொரு வருடமும் வருடாந்தப் பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டு அதில் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டித்தல் வேண்டும். 

வருடாந்தப் பொதுக்கூட்டம் நடைபெறாமலும் உரிய நிருவாகிகள் முறையாகத் தெரிவுசெய்யப்படாமலும் இருந்தமையினால் இது முறையற்ற சபையாக இயங்கி வந்திருக்கின்றன என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.

அது மட்டுமன்றி அந்த அபிவிருத்திச் சபையில் உள்ள பலரின் சொந்த அரசியல் நலன்களுக்காக வைத்தியசாலை பாவிக்கப்பட்டு வந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதவாது இங்கு உறுப்பினர்களாக உள்ள பலர் சார்ந்துள்ள கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகளை மட்டும் நாடுவதும் அவர்களை மட்டும் அழைத்து நிகழ்வுகள் நடாத்துவதும் இவர்களது வாடிக்கையாகிப் போனதால் ஏனைய அரசியல்வாதிகள் சாய்ந்தமருது வைத்தியசாலை விடயத்தில் பெரிதும் அக்கறை காட்டவில்லை. இவர்கள் கூட மாற்று அரசியல் தலைமைகளையோ அல்லது அவர்களின் பிரநிதிகளையோ நாடி வைத்தியசாலை அபிவிருத்தி விடயத்தில் உதவிகள் கோரியதற்கான சான்றுகளைக் காண முடியவில்லை.

இந்த அபிவிருத்திச் சபையினரின் காலப்பகுதியிலேயே சாய்ந்தமருது வைத்தியசாலைக்கென ஒதுக்கப்பட்ட எக்ஸ்ரே இயந்திரங்களும்இ சத்திர சிகிச்சை உபகரணங்களும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டன என்பது பொதுமக்களின் மற்றொரு குற்றச்சாட்டு. இந்த வைத்தியசாலை ஒரு சாதாரண மருந்தகமாகவே இயங்கி வருவதாக இவர்கள் ஒரு அறிக்கையை  சுகாதார அமைச்சுக்குச் சமர்ப்பித்ததாக இவர்கள் மீது இன்னொரு வலுவான குற்றச்சாட்டும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த எம்.எஸ்.எம் சுபையிர் சாய்ந்தமருதுஇ நிந்தவூர் மற்றும் தம்பலகாமம் ஆகிய மூன்று வைத்தியசாலைகளையும் ஆதார வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கான ஒரு பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றி அதனடிப்படையில் நிந்தவூர் மற்றும் தம்பலகாமம் வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலைகளாத் தரமுயர்த்தப்பட்டன. 

ஆனால்இ அதன் பின்னர் வந்த நமது பிரதேசத்தைச் சேர்ந்த மாகாண சுகாதார அமைச்சர்கள் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்;த்துவதாக பல வாக்குறுதிகளை அளித்திருந்தும் இன்னும் நிறைவேற்றப்படாது சாய்ந்தமருது வைத்தியசாலையை புறக்கணித்தே வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாகாணசபை நிறைவேற்றிய பிரேரணையை ஜனாதிபதி அல்லது பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்து இந்த வைத்தியசாலையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்காது தமது ஆதரவு கட்சி சார்ந்த அரசியல்வாதிகளை மாத்திரம் நம்பியிருந்தமையும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்ததுடன் இந்த விடயத்திலும் தற்போதைய அபிவிருத்திச் சபை மீது பொதுமக்களின் வெறுப்பு அதிகரிக்க காரணமாக அமைந்தது.

கடந்த நவம்பர் எழுச்சிக்கு சில வாரங்களுக்கு முன்பதாக சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபை புனரமைக்கப்பட வேண்டுமென்ற கோஷம் உரத்துப் பேசப்பட்டபோதும் பிந்திய நாட்களில் ஏற்பட்ட நவம்பர் எழுச்சி அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல் காரணமாக புனரமைப்பு விடயம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.

தேர்தலின் பின்னர் புனரமைப்பு விடயம் மீண்டும் தலைதூக்கியது. அபிவிருத்திச் சபை புனரமைக்கப்பட வேண்டுமென சாய்ந்தமருது பிரதேச வைத்திய அதிகாரியிடம் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டபோதும் வைத்திய அதிகாரி அதனை சரிவர செய்யத் தவறியமையே நிலமை பூதாகரமாக மாறி வைத்தியசாலை வளாகத்தினுள் மக்கள் மிக அமைதியாகப் பிரவேசித்து தட்டிக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இங்கு முக்கிய விடயமொன்றை உற்றுநோக்க வேண்டியுள்ளது. அதாவதுஇ பிரதேச வைத்திய அதிகாரிக்கு பல தடவை சுட்டிக்காட்டியும் அவர் புனரமைப்பு விடயத்தில் கரிசனை காட்டாது பொடுபோக்காக இருப்பதாக உணர்ந்த பொதுக்கள் இந்த விடயத்தை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். 

பள்ளிவாசல் நிருவாகத்தினர் இது தொடர்பில் பிரதேச வைத்திய அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசியபோதுஇ அபிவிருத்திச் சபைக்கு இது குறித்து அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். 

ஆனால்இ பள்ளிவாசலின் கோரிக்கையை ஏற்று எவ்வித ஆக்கபபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கத் தவறியமை பதவி வழி தலைவர் என்ற ரீதியில் சாய்ந்தமருது பிரதேச வைத்திய அதிகாரியின் தலைமைத்துவ குறைபாட்டை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இது தொடர்பில் பள்ளிவாசல் நிருவாகிகளை நேரில் சந்தித்து பேசவுள்ளதாக வைத்திய அதிகாரியும் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் தெரிவித்திருந்தும் அதனைச் செய்யாது காலம் கடத்தி வந்ததால் பள்ளிவாசல் நிருவாகமும் சலிப்படைந்திருந்தது. ஆனாலும்இ இந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற அபிவிருத்திச் சபைக் கூட்டமொன்றிற்கு பள்ளி நிருவாகத்தின் சார்பில் இரு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

பிரதிநிதிகள் முன்னிலையிலும் அபிவிருத்திச் சபை புனரமைப்பு விடயம் பேசப்பட்டும் பிந்திய நாட்களில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை அவமதித்த செயலாகவே பார்க்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து வைத்தியசாலை அபிவிருத்திச் சபையை புனரமைக்குமாறு கோரி நூற்றுக்கும் மேற்பட்ட சாய்ந்தமருது பொதுமக்கள் கையொப்பமிட்ட மகஜர் கடந்த 2018.04.14ம் திகதி பிரதேச வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. இந்த மகஜரைப் பெற்றுக் கொண்ட வைத்திய அதிகாரி இவ்விடயம் குறித்து அபிவிருத்திச் சபையிடம் பேசி பதிலொன்றை அறிவிப்பதாக மகஜரைக் கையளித்தவர்களிடம் தெரிவித்திருந்தும் அது குறித்த நடவடிக்கை இந்தநாள் வரைக்கும் செய்யப்படவில்லை. இதுவும் பொதுமக்களின் கோரிக்கையை பிரதேச வைத்திய அதிகாரி உதாசீனம் செய்ததாகவே கருதப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக பல்வேறு அழுத்தங்கள் சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த விடயத்தை பிரதேச வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்த உறுப்பினர்கள் இது தொடர்பில் கலந்துரையாட நேரம் ஒருக்கித் தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கடந்த 2018.04.23ம் திகதி மாநகர சபை உறுப்பினர்கள்இ அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் வைத்தியர் குழாம் பங்குபற்றிய கலந்துரையாடல் சாய்ந்தமருது வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. வைத்தியசாலை அபிவிருத்திச் சபையில் உறுப்பினராகி முனைப்புடன் செயற்பட்டு தங்களால் இயன்றளவு பங்களிப்புகளைச் செய்வதற்கு பலர் முன் வந்திருக்கும் விடயம் உறுப்பினர்களால் சபையில் இருந்தவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. புதிய அங்கத்தவர்களை இணைக்கும் பொருட்டு சாய்ந்தமருது முழுக்க பரவலாக அங்கத்தவர்களை உள்வாங்குவதற்கான பின்வரும் முன்மொழிவு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதாவதுஇ 'ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் அறுபது அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவத்தை ஒரு வாரத்திற்குள் மாநகர உறுப்பினர்களுக்கு அபிவிருத்திச் சபை செயலாளர் வழங்குவதாகவும் புதிய அங்கத்தவர்களை சேர்த்து மிக விரைவில் பொதுக் கூட்டத்தை நடாத்தி புதிய நிருவாகிகளைத் தெரிவு செய்வதாகவும்' தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க செயலாளர் விண்ணப்ப படிவங்கை வழங்காது காலம் கடத்தலானார். இது தொடர்பில் செயலாளரை பல தடவைகள் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டும் அதற்கு பொறுப்பற்ற விதமாக அவர் பதிலளித்துள்ளதுடன் சில சமயங்களில் இவர்களது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்தும் வந்துள்ளார். இவ்வாறு உறுப்பினர்களை உதாசீனப்படுத்தியமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும். ஆனாலும்இ இந்த விடயத்தில் உறுப்பினர்கள் மிக நிதானமாகவே செயற்பட்டு வந்துள்ளனர்.

செயலாளர் பொறுப்பற்ற விதமாக செயற்படுவதை பதவி வழி தலைவர் என்ற ரீதியில் பிரதேச வைத்திய அதிகாரி கண்டும் காணாததும்போல் நடந்துகொண்டமை சாய்ந்தமருது மக்கள் மத்தியிலும் வைத்தியசாலை அபிவிருத்தி விடயத்தில் பங்காளர்களாக செயற்பட முன்வந்துள்ள பலரையும் பலத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கி இருந்தது. அத்துடன் பிரதேச வைத்திய அதிகாரி யாராவது அரசியல்வாதிகளின் தூண்டுதலால் பக்கச்சார்பாக செயற்படுகின்றாரா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளதுடன் இவரது வினைத்திறனற்ற நிருவாகத்தையும் வெளிப்படுத்துகின்றது என்றே கூற வேண்டியுள்ளது.

இந்த புனரமைப்பு தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இல்லாமல் போனதன் வெளிப்பாடே கடந்த 2018.05.12ம் திகதி சாய்;ந்தமருது வைத்தியசாலையில் நடந்தேறியது. குறித்த தினம் பொதுமக்கள்இ ஊர் நலன்விரும்பிகள் பலர் வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடி புனரமைப்பு விடயம் பிற்போடப்படுவதால் வைத்தியசாலை தொடர்ச்சியாக பின்னடைவு காண்பதாகவும்இ அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொடுபோக்காக செயற்படுவதையும் சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அங்கு பொதுமக்கள் குழுமியிருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மாநகர சபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதால் அவர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து மக்களுடன் பேசி இது தொடர்பில் பிரதேச வைத்திய அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு குழுமியிருந்து மக்கள் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கோஇ நோயாளிகளுக்கோ இடையூறுகளை ஏற்படுத்தியதாக அறிய முடியவில்லை. ஆனால்இ இந்த விடயத்தை சிலர் தங்களது அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்வதற்காக கையிலெடுத்துள்ளதாகப் பேசப்படுகின்றது.

இதன்போது பொதுமக்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச வைத்திய அதிகாரி 'புனரமைப்பு விடயத்தை மிக விரைவில் செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக'த் தெரிவித்து அங்கத்துவ விண்ணப்ப படிவத்தையும் அவ்விடத்திலேயே ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலை புனரமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்து அவர்களை தொடந்தும் இந்த முயற்சியில் இறங்கத் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை செய்ய சிலர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் வைத்தியசாலை அபிவிருத்திச் சபையில் சிலரை வைத்துக்கொண்டு வைத்தியசாலையை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் கைங்கரியத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சில அரசியல் தரப்புகள் முனைப்புடன் செயற்பட தீட்டியுள்ள சதி பகிரங்கமாகவே வெளிப்படுகின்றது.

எனவேஇ சாய்ந்தமருது வைத்தியசாலை புனரமைப்பு விடயத்தை உடினடியாகச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அனைத்துப் பொதுமக்களும் அழுத்தம் கொடுக்கத் தவறுமிடத்துஇ நமது வைத்தியசாலையை இழந்து நிற்கும் துர்ப்பாக்கிய நிலை மிக விரைவில் ஏற்படலாம் என்ற அபாய அறிவிப்பைச் செய்து முடிக்கின்றேன்.
சாய்ந்தமருது வைத்தியசாலை மீதான மக்கள் எழுச்சிக்கு யார் காரணம் ?  சாய்ந்தமருது வைத்தியசாலை மீதான மக்கள் எழுச்சிக்கு யார் காரணம் ? Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.