நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டு ஆணைக்குழுக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளனசமகால நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டு
ஆணைக்குழுக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.
நீதித்துறை திருத்தச் சட்டமூலம் காலவிதிப்பு சட்டமூலம் தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மக்களது பணம் தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது. மக்கள் பணத்தை வீண்விரயம் செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டும் உரிமை பாராளுமன்றத்தை சார்ந்ததாகும். இன்று நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மூன்று நீதியரசர்கள் அடங்கிய மேல்நீதிமன்றங்களை அமைக்க வழிவகுக்கிறது என்று தெரிவித்தார்.

எந்தவொரு தனிப்பட்ட நபர்களையும் இலக்குவைத்து விசேட உயர்நீதிமன்றத்தை அமைக்கும் நீதிமன்ற(திருத்த) சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை என்று நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பத்தொன்பதாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அதனூடாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தமையினால் பொலிஸ் அதிகாரி ஒருவரைக்கூட மாற்றமுடியாத சூழல் காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டு ஆணைக்குழுக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன  நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டு ஆணைக்குழுக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5