திருமலையில் இனமுறுகல் தீவிரம்; உடன் நடவடிக்கை அவசியம்




திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம், சிங்கள-முஸ்லிம் இனமுறுகல் நிலைமைகள்
கூர்மையடைந்துவருகின்றமையினை அண்மைய நாட்களாக அவதானிக்க முடிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். அண்மையில் இனமுரண்பாட்டு நிலைமைகளை அவதானிப்பதற்காக திருமலைக்கு விஷேட கள விஜயமொன்றினை மேற்கொண்டதன் பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட முறுகல் நிலைகளை சில இனவாத சக்திகள் தமக்குச் சாதகாமாக பயன்படுத்த முயற்சித்திருப்பதை குறித்த பாடசாலை சமூகத்தவர்கள் அவதானித்திருக்கின்றார்கள்; ஒரு பாரிய இனக்கலவரத்தை நோக்கியே அங்கிருக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் வழி நடாத்தப்படுகின்றார்களே என்று சந்தேகிக்கும் வகையில் மேற்படி விடயம் கையாளப்பட்டிருந்தமையினையும் நாம் உணர்கின்றோம்

எனவே தற்போது இவ்வாறு முளைவிடுகின்ற இனவிரோத எண்ணங்கள், செயற்பாடுகளைக் கண்டு நாம் வாய்மூடியிருந்தால் பின்னாட்களில் இதன் விளைவுகள் கடுமையானதாக அமையும்.
வளப்பகிர்வுகள், அரச வேலைவாய்ப்புகள், காணிப் பகிர்வுகள் போன்ற விடயங்களில் இங்கிருக்கும் சமூகங்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன

இவ்வாறான சமச்சீரற்ற தன்மைக்கு ஒவ்வொரு இனத்துவங்களும் மற்றைய இனத்துவங்களின் மீது சந்தேகம் கொள்கின்ற சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. இதன் அடுத்த நிலையாகவே வெறுப்பும் குரோதமும் ஏற்படும், அதனைத் தொடர்ந்து அது இனங்களுக்கிடையிலான வமுறையை நோக்கி நகரும்.

ஒவ்வொரு இனத்துவங்களினதும் அரசியல் தலைமைகள் தமது பதவிசார்ந்த இருப்பைத் தக்கவைப்பதற்காக தமது இனத்துவத்தின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்துவார்கள், அவர்கள் அதனையே நீதி, நியாயம் என்றும் கருதுவார்கள்; பொது நீதி இதனால் சிதைவடையும், பொதுநீதி குறித்து எவரும் சிந்திக்கமாட்டார்கள், இதன் காரணமாகவும் வன்முறைகளை நோக்கிய நகர்வுகள் தீவிரமடையும்.

இத்தகைய ஆபத்தான நிலைமைகளைத் தடுப்பதற்கு குறிப்பாக தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒரு திறந்த மனதுடனான கலந்துரையாடலை மேற்கொள்வது மிகவும் அத்தியாவசியமானது. சிவில் சமூகத் தலைவர்கள்,  அரசியல் தலைவர்கள் இதுவிடயத்தில் உடனடிக் கவனம் செலுத்துவது அத்தியாவசியமானதாகும் எனவும் அஸ்மின் அவர்கள் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் எம்.எல்.லாபிர்
திருமலையில் இனமுறுகல் தீவிரம்; உடன் நடவடிக்கை அவசியம் திருமலையில் இனமுறுகல் தீவிரம்; உடன் நடவடிக்கை அவசியம் Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.