சமூகம் ஏமாந்து போயுள்ள இரண்டு விடயங்கள்.


இன்றைய சூழலில் வாழுகின்ற சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏன்? முதியவர்கள் கூட ஏமாற்றப்படுகின்ற
ஒரு விடயம் விளம்பரம். இந்த விளம்பரத்துக்குள் உள்வாங்கப் படுகின்ற விடயங்களின் சாராம்சம் ஒன்று மலிவு/இலவசம் இன்னொன்று இலகு கிடைப்பனவு/ பாவனை.

இந்த இரண்டு விடயங்களும்தான் உலகிலுள்ள அத்தனை தனியார் கம்பனிகளிதும் மூலதனம். நாம் சிறந்த பொருட்களை தேடுவதை விட இலகுவாக கிடைக்க கூடிய மலிவான பொருட்களின் மீதே நமது கவனத்தை செலுத்துகின்றோம். இவை வெளிப்பார்வைக்கு மலிவாகவும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பையுமே ஏற்படுத்துவதாக இருக்கும்.

எந்தவொரு Super Market இலும் மரக்கறி வகைகளுக்கு கிலோ கிராமில் விலையிடப் படுவதில்லை 100கிராம் இவ்வளவு 200கிராம் இவ்வளவு என்ற அடிப்படையில்தான் விலையிடப்பட்டு காட்சிப் படுத்தப்படுகின்றது. இதன் கிலோ கிராமிற்கான மொத்த விலை சாதாரண கடைகளை விட அதிகமாகவே இருக்கும். இவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பதற்காக எத்தனையோ வகையான Chemicals பயன்படுத்தப் படுகின்றது. அதே மரக்கறி வகைகளை Fresh ஆக ஒரு அங்காடி வியாபாரி நம் வீடுகளுக்கு எடுத்து வரும் போது நாம் யாரும் அதனை வாங்குவதற்கு விரும்புவதில்லை காரணம் அவர்களிடத்தில் நம் மனது பழக்கப்படுத்தப் பட்டுள்ள காட்சிப்படுத்தல் இல்லை.

Chemical பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற உணவு பொருட்களை இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கின்றது என்ற அடிப்படையில் பயன்படுத்துகின்ற நாம் அதனால் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளையோ அசௌகரியங்களையோ கவனத்தில் எடுப்பதில்லை.

நமக்கு தேவையே இல்லாத ஒன்றைக் கூட நமது அத்தியாவசிய தேவைகளாக மாற்றக்கூடிய சக்தி இந்த விளம்பரங்களுக்கு கானப்படுகின்றது. ஒரு காலத்தில் நாவினால் உணரப்பட்ட சுவை இன்று கண்களினாலும் மூளையினாலும் உணரப்பட்ட பின்னரே அதன் நுகர்வு தொடர்பான சிந்தனை தீர்மானிக்கப் படுகின்றது.

நாம் காலையில் பல் துலக்கும் பற்பசை முதல் இரவு தூங்கும் போது பயன்படுத்தும் நுளம்புதிரி வரைக்கும் அத்தனையிலும் chemicals பயன்படுத்தப் படுகின்றது. நாள் முழுவதும் அவற்றை பயன்படுத்தி விட்டு சுகாதாரமான வாழ்க்கைக்கு வைத்தியர்களை நாடுகின்றோம். இன்று வைத்தியர்கள் எழுதும் மருந்து சிட்டையை கூட விளம்பரம்தான் தீர்மானிக்கின்றது.

நாம் வாழ்வதற்கு அதிகளவு பணம் தேவையில்லை அடுத்தவன் போல் வாழ்வதற்குத்தான் அளவுக்கு அதிகமான பணம் தேவைப் படுகின்றது. அடுத்தவர் திருப்திக்கு வாழ்வதை விட்டுவிட்டால் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும் நம் திருப்திக்கு வாழ ஆரம்பித்தால் மீதி பிரச்சனையும் குறைந்து விடும்.

விளம்பரங்களால் அதிகளவில் கவரப்படுவது பெண்களே. இதனால் தான் அதிகளவான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் நாடகங்கள் ஒளிபரப்ப படும் போதே ஒளிபரப்பபடுகின்றது. நமக்கு தேவையோ இல்லையோ அதை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலுக்குள் அந்த பெண்களும் குடும்பமும்  தள்ளப்படுகின்றது. இதனால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியான உளைச்சல்களுக்கும் அந்த குடும்ப அங்கத்தவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் கூட வீன்விரயங்கள் கட்டாயமாக தவிர்ககப்படவேண்டிய  ஒன்றாகவே கானப்படுகின்றது.

ஆகவேதான் விளம்பரங்கள் எல்லாம் உண்மை, அவை நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையை விட்டு விட்டு தேவையானவற்றை மட்டும் நுகர்வு செய்வதன் மூலமே திருப்தியான வாழ்க்கையை வாழலாம்.

Sameen Mohamed Saheeth
~Nintavur ~
சமூகம் ஏமாந்து போயுள்ள இரண்டு விடயங்கள். சமூகம் ஏமாந்து போயுள்ள இரண்டு விடயங்கள். Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.