தொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சி..



தொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இப்பலோகம
பிரதேச செயலாளர் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அனுராதபுரம் விஜிதபுர பிரதேசத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபை தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து  இதனை இனவாத செயற்பாடாக சித்தரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனுராதபுரம் இப்பலோகம பிரதேச செயலக பிரிவிற்கு உற்பட்ட பெலுங்கள எனும் பிரதேத்தில் அமைந்துள்ள தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஒன்றை வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபை  சேதப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து  இப்பலோகம பிரதேச செயலாளர் சாஜிதா பானு மீது  வீன் பழி போட்டு இந்த விடயத்தை இனவாத ரீதியில் சித்தரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு அதிகார சபை வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக காணி ஒன்றை கேட்டிருந்ததாகவும் அதற்கு அமைவாக காணியை அடையாளப்படுத்தி கொடுத்ததாகவும்  சுட்டிக்காட்டியுள்ள இப்பலோகம பிரதேச செயலாளர் சாஜிதா பானு  குறித்த பிரதேசத்தில் வீடமைப்பு கட்டுமான பணிகளை முன்னெடுக்க  எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் பிரதேச செயலகம் அடையாளப்படுத்திக்கொடுத்த காணி அல்லாத ஒரு காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபை சட்டவிரோதமாக துப்பரவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களை குடியேற்றவே  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலி தகவலகள் பரிமாறப்பட்டுள்ளன.


தொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சி.. தொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சி.. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.