இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் தொழிலாளர் தினத்தை முன்னிட்ட பொது நிகழ்ச்சி நாளை.


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் தொழிலாளர் தினத்தை முன்னிட்ட பொது நிகழ்ச்சி
நாளை வெள்ளிக்கிழமை (11.05.2018) மாலை 7 மணி முதல் 9 மணி வரை கொழும்பு- 07, புதிய நகர மண்டப கேட்போர்கூடத்தில் நடைபெறவிருக்கிறது.

“உழைக்கும் மக்களின் எழுச்சியும் அரசியல், மதத் தலைவர்களின் பொறுப்புக்களும்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உப தலைவர் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி), ப்ரபோதய மாசிகையின் பிரதம ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர். இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் 0772383533 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உப தலைவர் எம்.எச்.எம். உஸைர் தெரிவித்துள்ளார்.


-ஜெம்ஸித் அஸீஸ்-
Head- Publication Unit
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் தொழிலாளர் தினத்தை முன்னிட்ட பொது நிகழ்ச்சி நாளை. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் தொழிலாளர் தினத்தை முன்னிட்ட பொது நிகழ்ச்சி நாளை. Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5