விஷேட பயிற்சியில் தர்கா நகர் ஆறு உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரம் பங்கேற்பு..
மேல் மாகாணத்திற்குட்பட்ட  உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு மேல் மாகாண உள்ளுராட்சிமன்ற திணைக்களத்தால் விசேட பயிற்சி  நடைபெறுகின்றது.இப்பயிற்சி வெவ்வேறுபட்ட உள்ளுராட்சிமன்றங்கள்  குழுக்களாக பிரிக்கப்பட்டு  நடைபெறுகிறது. 

இப்பயிற்சியில், இலங்கையின் அரசியல் யாப்பு , அரசியல் சட்டங்கள், நிதி மற்றும் நிர்வாக சட்டங்கள் மற்றும் விதிகள் , உள்ளுராட்சிமன்ற சட்ட திட்டங்கள் , உள்ளுராட்சிமன்ற சுற்றரிக்கைகள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் சேவைகள் என்று பல பிரயோசனமான விடயங்களை உள்ளடக்கிய பயிற்சியை உறுப்பினர்களுக்கு வழங்குவதனூடு சிறந்ததொரு சேவையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேருவளை பிரதேச சபை, புலத்சிங்ஹல பிரதேச சபை, திவுலபிட்டிய பிரதேச சபை, ஹொரன பிரதேச சபை, ஆகிய சபைகளுக்கான பயிற்சி எம்பிலிபிட்டியவில் 14 ஆம்  திகதி ஆரம்பமானது. 

பேருவளை  பிரதேச சபைக்கு தர்கா நகரில் இருந்து ஆறு பிரதிநிதிகள் இருக்கின்ற போதும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதி ஹஸீப் மரிக்கார் மாத்திரமே இப்பயிற்சியில்  கலந்துகொண்டுள்ளார்.

அதே நேரம் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத பிரதேச சபை உறுப்பினர் நபீல் நஸீர் நோன்பு காலம் துவங்குவதால் தாங்கள் ஆணையாளருக்கு அறிவித்துவிட்டு இந்த பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை எனவும் பிரிதொரு தினத்தை தாங்கள் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார் .
விஷேட பயிற்சியில் தர்கா நகர் ஆறு உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரம் பங்கேற்பு.. விஷேட பயிற்சியில் தர்கா நகர்  ஆறு உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரம் பங்கேற்பு.. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5