சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்யும் முறையினை மேலும் முறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்..


சர்வதேச பாடசாலைகளை முறையான முறையில் பதிவு செய்ய வேண்டிய அத்தியவசியமான
சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அதனடிப்படையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு முறையான வரையறைகளை தயாரிக்கும் வரையில், கல்வி அமைச்சின் மூலம் வழங்கப்படுகின்ற சிபார்சுகளின் அடிப்படையில், சர்வதேச பாடசாலை அமைப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முறையினை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்தல், வரையறுத்தல், நிர்ணயித்தல், தரத்தினை உறுதி செய்தல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கு தேவையான சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை ஸ்தாபித்தல், அப்பாடசாலைகளின் ஆசிரியர்களை பயிற்றுவித்தல், சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் உள்நாட்டு மாணவர்களுக்கு சிங்களம், தமிழ், சமயம் மற்றும் வரலாறு ஆகிய பாடவிதானங்களை கற்பிப்பதை கட்டாயப்படுத்தல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றினை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.

சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்யும் முறையினை மேலும் முறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்..  சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்யும் முறையினை மேலும் முறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்.. Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5